பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அவ்வளவில் என் வளையல் அணிந்த தோள்கள் அதனை ஆற்ற இயலாது மெலிந்தன. ஆக்ைய்ால் யான் என்ன செய்வேன்?” என்று வருந்தி சொன்னாள்

32. அழகு திரும்பியது! காண்மதி, பாண இருங்கழிப் பாய்பரி நெடுந் தேர்க் கொண்கனோடு தான்்வந்தன்று, எள் பாமைக் கவினே. - ஐங் 134 தலைவி பாணனை நோக்கி, “பாணனே, பெரிய கழியில் பாய்ந்து போகும் குதிரைகள் பூட்டப்பட்ட நீண்ட தேரை யுடைய தலைவன் வந்தனன் அதனால் அவனுடன் பிரிந்தது போல மாந்தளிரின் தன்மையுடைய என் அழகும் தான்ே வந்து பொருந்தியது காண்க!" என்று மகிழ்ந்து கூறினாள்

33. பைதலம் அல்லேம்! பைதலம் அல்லேம், பான பணைத் தோள், ஐது அமைந்து அகன்ற அல்குல் நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே!

- ஐங் 135 தலைவி,“பானனே, மூங்கிலைப் போன்ற தோள்களையும், மென்மை அமைந்த அல்குலையும் நெய்தல் மலர் போன்ற கண்களையும் உடையவளை நாம் காணப் பெறுவோமாயின் வருத்தத்தை அடையமாட்டோம்” என்று கூறினாள்.

34. நீ நானிலை பான!

நாண் இலை மன்ற, பாண! - நீயே கோள்நேர் இலங்கு வளை நெகிழ்த்த கானம்.அம் துறைவற்குச் சொல் உகுப் போயே. - ஐங் 136 தலைவி, "பாணனே, வளைந்த அழகிய வளைகள் நெகிழும்படி பிரிந்த கடற்கானல் சோலையையுடைய துறைவன் பொருட்டுப் பயன் படும் சொற்களை வறிதே கூறுகின்றாய். ஆதலால் நீ தெளிவாக நாணம் அற்றவன் ஆவாய்” என்று இடித்துச் சொன்னாள்