பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 22?

கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப்

பொழுதின்கண் வெள்ள மான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான் போல் அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ? மாலை நீ t ஈரம் இல் காதலர் இகந்து, அருளா இடன் நோக்கி போர்தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல் ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ? மாலை நீ - கந்து ஆதல் சான்றவர் னளை தாராப் பொழுதின்கண் வெந்தது ஒர் புண்ணின்கண் வேல் கொண்டு

நுழைப்பான் போல் காய்ந்த நோய் ணழப்பாரைக் கலக்கிய வந்தாயோ? என ஆங்கு இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை துணி கொள் துயர் தீரக் காதலர் துணைதரமெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை ஒல்லென நீக்கி, ஒருவரது காத்து ஆற்றும் நல் இறை தோன்ற, கெட்டாங்கு இல்லாகின்றால், இருளகத்து ஒளித்தே. - கவி 120 அருள் இல்லாத அறிவால் அறம் செய்வதை எண்ணாத வனாய்ப், பண்பாட்டை மேற் கொள்ளாதவனாய், எல்லாரும் அஞ்சும்படி தனக்குள்ள வாழ்நாளைப் பயன் அற்றதாகச் செலுத்திய நெஞ்சம் உடையவன் மயக்கம் போன்று, மெல்ல மெல்ல இருளால் உலகம் நிறைகிறது. நிறைய, கணவரைப் பிரிந்தவர்க்குத் தனிமை மிகும்படி கதிரவன் மேற்கு மலையை அடைகிறான் வறுமையால் பிறரிடம் போய் ஒரு பொருளை வேண்டுபவனின் நெஞ்சம் போல், மரம் எல்லாம் பொலி வழிகின்றன. பின் அம் மரமெல்லாம், இரப்பாரைக் கண்டு