பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ; அன்பொடு புணர்ந்த ஐந்தினை - தெய்தல்

நீலமணி போன்று விளங்கும் உப்பங்கழி உறங்கும் தன் மையைப் போன்ற கடலை உடைய குளிர்ந்த சேர்ப்பனே!

நீ ஒருவழித் தணந்து பிரிந்து உன் ஊரில் தங்கி முன்பு உன் நெஞ்சில் தாங்குவதற்கு அரிதாய, காமத்தை உன்னிடத் தினின்று கைவிட்டனை அதனால் நீர்த்துளியுடன் பொருந்திய பூப் போல நிறுத்திய அளவில் அமையாது, விரைய வாழும் நீரில் கிடந்து நீந்தும் கண்ணையுடைய அவளுக்கு அசையும் கடனிைன்று எழுந்து ஒலிக்கும் அலைதான்் துணையாய் நின்று ஆரவாரம் செய்யும்

நீ இங்கு வாராமல் நின்றனை அதனால் உன் வீட்டகத் தில் இருந்து வருந்திய மேனியை உடையவளுக்கு நீ கொண்டிருந்த வேட்கை உன்னிடமிருந்து நீங்குதலால், மணம் வீசும் தாது உதிர்ந்து சிந்தும்படி விளங்கும் இதழ்கள் விழும் குலையை யுற்ற காந்தள் மலரைப் போல் முன் கையினின்று கழலும் வளையை உடையவளுக்கு இரவுக் காலத்தில் அசைந்து வரும் காற்றுத் தான்் துணையாகி நின்று வருந்தும். இனிய துணையான நீ இவளைக் கை விட்டு உன் வீட்டில் இருப்பதால் சுடரையுடைய ஞாயிற்றின் மிக்க ஒளி யால் தன் ஒளி கெடும் உச்சிக் காலத்துத் திங்களைப் போல் நன்மை கெட்ட முகத்தை உடையவளுக்கு இரவுக் கால்த்தில் தன் சேவலைப் பிரிந்து வருந்தும் தனியான குருகு தான்் துணையாய் உரையாடும்

இனிய நீர்த்துறையில் வீசும் அலை ஏறக் கொண்டு வந்து போடுவதால் மணல் மேட்டிலே கிடந்த மீனை, மீளும் அந்த அலை வருந்தாதபடி கைக் கொண்டு போன தன்மை போல், நீ முன்னம் நடத்தின நெறி தாழ்வதால் மெலிந்து வருந்திய வளின் வருத்தத்தைப் பாய்ந்து செல்லும் குதிரை பூட்டப் பட்ட திண்ணிய தேர் வெளியாக வரைவோட வந்து களையு மானால் நல்ல காலம் எனத் தோழி தலைவனை மணந்து கொள்ளும்படி வேண்டினாள்

313. வருத்தத்தை நினையாது போனான்!

கோதை ஆயமும் அன்னையும் அறிவுற, போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப,