பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

21


35. முன்போல் தந்நலம் பெறமுடியுமா? நின் ஒன்று வினவுவல், பாண நும் ஊர்த் திண் தேர்க் கொண்கனை நயந்தோர் பண்டைத் தம்நலம் பெறுபவோ மற்றே? - ஜங் 137 தலைவி பாணனை நோக்கிப், "பாணனே, உன்னை ஒன்று வினவுகின்றேன் திண்மையான தேர்களை உடைய தலைவனை விரும்பிய மகளிருள், உம் ஊரில் இழந்த தம் நலத்தைத் திரும்பவும் முன்புபோல் பெறுபவர் உண்டோ! சொல்” என்று வினவினாள்

36. தாராதோப் பண்பிலை! பண்புஇலை மன்ற, பாணl - இவ் ஊர் அன்புஇலகடிய கழறி, 3 மென் புலக் கொண்கனைத் தாராதோயே! - ஐங் 136 தலைவி பாணனை நோக்கி, "பாணனே, இவ் ஊரில் மெல்லிய புலங்களையுடைய தலைவனைக் கண்டு அவனிடம் அன்பற்றவையும் கடியத் தக்கவையுமான இடிக்கும் சொற்கள் சில கூறி, அவனை இன்றியமையேமாகிய எம்மிடம் கொண்டு வராது போயின், உறுதியாக நீ பண்பில்லாதவன் ஆனாய்' என்று வருந்தி சொன்னான்.

37. பாணன் நலத்தை அழிக்கின்றான்! அம்ம வாழி, கொண்க - எம் வயின் மாண் நலம் மருட்டும் நின்னினும், பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே. - ஜங் 139 தலைவி, "தலைவ, கேள், எம்மிடம் எம் சிறந்த நலத்தைக் கலங்கச் செய்யும் நின்னைவிட, நினக்கு வாயிலாய் வரும் பாணன், மகளிர் நலத்தை அழிக்கின்றான்” எனக் கூறினாள்

38. வளை நெகிழக் காண்க! காண்மதி, பாணl - நீ உரைத்தற்கு உரியை - துறை கெழு கொண்கன் பிரிந்தென, இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே! - ஐங் 140