பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


செறிந்திருந்த வளையல் கழலும்படி பண்ணியவனிடத்தில் சென்றாய். அங்ங்ணம் சென்ற நீ அவன் மனத்தினை அறிய என்னும் அளவு பெற்றாயோ? அதுதான்ும் அறியாதிருந் தாயோ? கூறுக” என்றாள்.

அந்த நெஞ்சம் கூறவில்லை ஆதலால் பின்னும் “அறி யாமை கொண்ட இரங்கத்தக்க என் மனமே! பொறுப்பதற்கு அரிய வருத்தும் காம நோயைச் செய்தவனிடத்தில் பகலும் இரவும் உறங்குதலை விட்டுக் கரிய கழியில் ஒதம் போவது வருவதாய்த் தடுமாறும் தன்மையைப் போன்று, நீயும் பல முறையாகப் போயும் வந்தும் தடுமாறி, அவனைப் பெறுதலை விரும்பி முடிவில் வருந்தினாய். இது வன்றோ, நீ பெற்றது” என நெஞ்சை நோக்கி வருந்திச் சொன்னாள் தலைவி.

315. விரைந்து வருக!

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின் கூரும் தன் எவ்வ நோய் என்னையும், மறைத்தாள்மன்காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு, ஆங்கே பீர் அலர் அணிகொண்ட பிறை நுதல் அல்லாக்கால்.

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின் புனை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்துணையாருன் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி அணிவனப்பு இழந்ததன் அணைமென் தோள்அல்லாக்கால்

இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யா, நீ துறத்தரின் நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறன் நலன் இழந்து, இனி நின்றுநீர் உகக்கலுழும் நெடும் பெருங் கண் அல்லாக்கால் அதனால், பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக்கால் அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர