பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

229


புரி உளைக் கலிமான் தேர் கடவுபு - விரி தண் தார் வியல் மார்பl - விரைக நின் செலவே.

- கலி 124

மூன்று உலகங்களையும், தன் திருவடியால் அளந்தவன் திருமால். அவன் எப்பொருளுக்கும் மூலமுதலாய் உள்ளவன் அவனுக்கு மூத்தவனான பலராமன் அழகுபெற உடுத்தது நீலநிற ஆடை அதை ஒத்த அழகையுடைய வெண்மை யான அலையையுடைய கடலானது வெண்மையுடைய இடு மணலிடத்து வந்து சூழ்ந்து விளங்கும் நீரையுடைய குளிர்ந்த சேர்ப்பனே!

இம் மங்கை, பெற்ற தன் அழகு கெடுமாறு மனம் கலங்குத லால் அப்போதே பீர்க்கம் பூவின் அழகைத் தன்னிடத்தே கொண்ட வளர்பிறை நெற்றியல்லாத பிற இடத்து, இவ் வூரில் உள்ளவர் அலரை உயர்த்திக் கூறும்படி நீ இவளைக் கை விட்டனை அதனால் பெருகும் தன் வருத்தத்தை யுடைய காம நோயை எனக்கும் தெரியாது மறைத்து விட்டாள். ஆனால் பெற்றது என்ன? இவளது நெற்றிதான்் புலப் படுத்திவிட்டதே!

தோழியர் தோள்களில் அழகு பெற்ற இயற்கை நலத்தை யும் இப்போது இழந்து, நீ இவளுக்கு அணிதலால் பெற்ற செயற்கை அழகையும் இழந்த தன் அணை போன்ற தோள் அல்லாத இடத்து, ஊரவர் அலர் தூற்றும்படி இவள் வருந்தும் வருத்தத்தை நீ அறியாய் நீ கைவிடுதலால் உண்டான தனக்கு நிகர் இல்லாத வருத்தத்தை உடைய காம நோயை எனக்கும் தெரியாமல் மறைத்து விட்டாள் ஆயினும் என்? இவள் தோள் தான்் புலப்படுத்திவிட்டதே!

வென்ற வேலின் முனையைப் போன்ற வெற்றியுடைய நலத்தை இப்பொழுது இழந்து நீர் சொரியும்படி அழுத நெடிய பெரிய கண் அல்லாத இடத்து, இன்று இவ்வூரில் உள்ளார் பழி கூறும்படி இவள் வருத்தத்தை அறியாமல் துறந்தாய் அதனால் தன்னிடம் உண்டான துன்ப நோயை எனக்கும் தெரியாமல் மறைத்தாள் ஆயினும் என் இவள் கண் தான்் புலப்படுத்தி விட்டதே!