பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மலர்ந்த குளிர் மாலையைக் கொண்ட அகன்ற மார்பனே! அந்த வருத்தத்தால் பிரிவில்லாதவரைப் போல் நீ இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்பு தெய்வத்தை முன்னிட்டுப் பிரியேன் என்று தெளிவித்த அந்தப் பிரிவின்மை அரியது என எண்ணாதவளாக அதனை உண்மை என்று துணிந்தாள் இவள். இத் தகையவளது அழிந்த அழகு முன் போல் நன்றாகும்படி என் நெஞ்சில் விரும்பிக் குதிரை பூட்டப் பட்ட தேரைச் செலுத்தி எம் மனையிடத்துச் செல்லும் செலவை விரைவாய் மேற் கொள்வாயாக என்று தலைவியை மணந்து கொள்ளும்படி தோழி தலைவனை வேண்டினாள்.

316. பசலை நீங்கிட மணப்பாயாக 'கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார், தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள், நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லைஆகலின் வண் பரி நவின்ற வய மான் செல்வ! நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால் அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்: மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண் அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! இமிழ் திரைக் கொண்க: கொடியைகாண் நீ. இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப் புலந்து அழ, புல்லாது விடுவாய்! இலங்கு நீர்ச் சேர்ப்ப கொடியைகாண் நீ. இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால் பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் நுண் வரி வாட வாராது விடுவாய்! தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ. என ஆங்கு அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று