பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

  • அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்

நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது, அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும் கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல, புதுவது கவினினை என்றியாயின், நனவின் வாரா நயனிலாளனைக் கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி.

'அலந்தாங்கு அமையலென் என்றானைப் பற்றி, என் நலம் தாராயோ என, தொடுப்பேன் போலவும், கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி, ‘புலம்பல் ஒம்பு என, அளிப்பான் போலவும்

முலையிடைத் துயிலும் மறந்தித்தோய் என நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், 'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது என தலையுற முன் அடிப் பணிவான் போலவும்கோதை கோலா, இறைஞ்கி நின்ற ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும், 'யாது என் பிழைப்பு? என நடுங்கி, ஆங்கே, பேதையை பெதிது எனத் தெளிப்பான் போலவும்

ஆங்கு

களவினால் கண்டேன் தோழி! காண் தகக் கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு என அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே- கலி 128 வாடைக் காற்று அசைத்தலால் வளைந்த தாழைச்

செடியின் அசையும் கொம்பில் இருந்த மெல்லிய நடையை உடைய நாரை, நம் தோளைத் துறந்து நமக்கு அருள் செய்யா தவரைப் போன்று நின்று கங்குலில் நம் துன்பத்தை அறியாமல் நம் மீது அருள் இல்லாது தனக்குக் காம நோயால் வருத்தம் அடையாது இடைவிடாமல் கூப்பிடும் இத்தகைய காணலை யுடைய சேர்ப்பனைப் பார்த்துக் கூடியவள் போன்று புதிய தாய், ஓர் அழகை உடையை ஆனாய் எனச் சொல்கின்றாய் ஆயின், வெளிப்பட வாராத உற வல்லாதவனைக் களவில் கண்டு நான் செய்ததைக் கேட்பாயாக: