பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

237


உன்னைப் பிரிந்தால் உயிர் வாழேன் என்று சொன்னான் அவன். அத் தகையவனைப் பிடித்துக் கொண்டு நீ கொண்ட என் நலத்தை எனத்குத் தருவாயாக என்று வளைத்துக் கொள்வதைப் போன்றும், அங்கு என் கழிந்து போன அழகை யான் அடையும்படி தழுவிச் சேர்ந்து இனி வருந்தாதே எனச் சொல்லி என்னை அருள் செய்பவன் போன்றும்

என்னை மறப்பதே அல்லாமல் அவசத்தால் முளைகளில் உறங்கும் உறக்கத்தையும் மறந்துவிட்டாய் என்று தலைவனை வளைத்துக் கொள்வேன் போன்றும், அதைக் கண்டு வலை யில் அகப்பட்ட மயிலைப் போல் காவலில் அகப் பட்டுப் பெரிதும் வருந்தினாய் என்று சொல்லி என் அடி முன்பு தன் தலை பொருந்துமாறு வணங்குபவன் போன்றும்,

தோழியே! நான் கனவில் கண்டேன் அதனால் என் பெறுவதற்கு அரிய உயிர் எனக்குக் காட்சி அளிக்கும்படி கனவிலே வந்த கானலை உடைய துறையை உடையவன், வெளியில் வந்து கூடுவதும் உண்டு என்று எண்ணி அவன் அருளும் அளவிலே அது நசையாய் உண்டானது என்று கனவில் நிகழ்ந்ததைக் கூறினாள் தலைவி.

320. மருந்தினும் கொடியது தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால் பல்வயின் உயிர்எல்லாம் படைத்தான்்கண் பெயர்ப்பான் ாேல், எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய: நல் அற நெறி நிறிஇ உலகு ஆண்ட அரசன் பின், அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர; எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலைபாய் திரைப் பாடு ஒவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்:து அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம் நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் காதல் செய்து அகன்றாரை உடையையோ-நீ. மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! நன்று அறை கொன்றனர், அவர், எனக் கலங்கி