பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தலைவி பாணனை நோக்கி, “பாணனே தலைமகன் உள்ள இடத்தைத் தேடிச்சென்று உரைக்கும் உரிமையை நீ உடையாய். ஆதலால் துறையையுடைய கொழுநன் என்னைப் பிரிந்தான்ாக, எம்முடைய வளைகள் நெகிழ்ந்து நீங்கும்: இம் மெலிவைக் காண்பாயாக!” என்று சொன்னாள்.

புவி-நகக்கொன்றை

39. துன்பம் இன்றி இருப்பது எப்படி? எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண் துளி வீசிப் பயலைசெய்தன பனி படு துறையே. - ஐங் 141 தலைவி, “தோழியே, நீரினால் அடித்து வரப்பட்ட மணல் பரந்த நிலத்தில் ஞாழலின் மலர் செருந்திப் பூவுடன் மணம் கமழக், குளிர்ந்த நீர்த்துறையில் துவலையாகிய குளிர்ந்த துணிகளை வீசிப் பசை கொள்ளச் செய்தன. ஆதலால் யான் துன்பம் இன்றி ஆற்றியிருப்பது எப்படி?’ என்று வினவினாள். 40. என் கண்கள் உறங்குக

எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப்படு சினை புள் இறை கூரும் துறைவனை உள்ளேன் - தோழி - படிஇயர் என் கண்ணே - ஐங் 142 தலைவி, “தோழியே, எக்கரில் நின்ற புலிநகக் கொன்றை யின் தாழ்ந்த மலர்க் கொத்துகள் பொருந்திய சினையில் பறவைகள் வந்து தங்கும் துறையையுடைய தலைமகனை நீ சொன்னபடியே நினையாமல் இருப்பேன். இனி, என் கண்கள் உறங்குக!” என்று தோழிக்குச் சொன்னாள்

41. முனிவு செய்த தடமென்தோள்! எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை இனிய செய்த நின்று, பின் முனிவு செய்த - இவள் தட மென் தோளே! - ஐங் 143 "மணல் மேட்டில் வளர்ந்து உள்ள ஞாழலில் தங்கிய பறவைகள் அதில் இருந்து ஒலியைச் செய்யும் அகன்ற துறை