பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

239


மன்றிலே உள்ள கரிய பனையின் மடலை அடைந்தி ருக்கும்.அன்றில் பறவையே! நம் தலைவர் தம் செய்த நன்றி களை யான் இருந்து சொல்லுதலைக் கெடுத்து விட்டார் என்று கலங்கிய என் வருத்தத்தை அறிந்து மிகவும் வருத்த வேண்டி ஆரவாரம் செய்கின்றாயோ? முன்பு இனிய துணை யாகிப் பின் பிரிந்தவரை என் போல் நீயும் பெற்றுள்ளமை யால் வருந்துகின்றாயோ? எனக் கூறி,

பெரும! நெஞ்சம் கலங்கி அயலில் உள்ளவர் அறிந்த வருத்தம் மிக்கு வருகையால், பெரியதாய்ப் பித்தம் ஏறு கின்றது அதனை வரைந்து கொண்டு போக்குவாயாக! அவ்வாறு போக்கும் பொது நுகர்ந்தவரின் நெஞ்சம் அழிந்து கெடும்படி அவரைக் கைவிடுவாயாயின், அது வருந்திய வருத்தத்தைப் போக்கும் மருந்தின் திறத்தை அறிந்த ஒருவன் அந்த மருந்தை அறியேன் என்று வஞ்சித்து அம் மருந்தின் செயற்பாட்டைக் கெடுப்பதனை விடக் கொடியதாகும் எனத் தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறி வரைவு கடாயினாள்

321. தொடுவழி தொடுவழி பசப்பு நீங்கியது 'நயனும், வாய்மையும், நன்னர் நடுவும், இவனின் தோன்றிய, இவை என இரங்க, புரை தவ நாடி, பொய் தபுத்து இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிக் செல்வம் போல் நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல, கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல் புல்இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை.

இம் மாலை ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்!

இம்மாலை இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என் அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்!