பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


இம்மாலை கோவலர் மீ குழல் இனைய, அரோ என் பூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும் என ஆங்கு, படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை, குடி புறங்காத்து ஒம்பும் செங்கோலான் வியன் தான்ை விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே. - கலி 130 இவனால் விளக்கம் அடைந்த உறவும் வாய்மை கூறு தலும் நடுவுநிலைமையும் ஆகிய இவை இனி விளக்கம் இல்லாது போய்விட்டன எனத் தனக்குப் பின்பு உலகத்தார் இரங்கும் வண்ணம் அவற்றுக்கு உயர்வு மிகுமாறு செய்தனன்; பொய்யை அழித்து நன்கு ஆண்டான். இத்தகைய மன்னனு டன் ஒருசேரக் கெட்ட நல்ல ஊழால் உண்டான செல்வம் போல் கதிரையுடைய ஞாயிறு மறைவதுடன் பகற்காலமும் போய்விடப் பின், வருத்தம் கொள்வதற்குக் காரணமாகிய மாலைக் காலம், எதையும் கல்லாது மூத்தவனின் அறிவுக்கண் அற்ற மனம்போல் புற்கென்ற இருள் உலகத்தில் பரவுதலைத் தரும்.

இத்தகைய மாலைப் போதில் துறவியர் அழலை அவி சொரிந்து எழுப்புவர்; என் செயலற்ற நெஞ்சம் கொதித்து எனக்குக் காமத் தீயை உண்டாக்கும்.

இம் மாலைப் போதில் கருமையான கழிகளில் பெருமை யுடைய மலர்கள் குவியும் என் மனம் அவனை நினைத்தலால் வருந்துவதுடன் தன் நினைவின்றிக் குவியும்.

இந்த மாலையில், ஆயரின் இனிய குழலால் நெஞ்சம் வருந்த என்பூவினது அழகு கொண்ட மையுண்ட கண் தனிமை அடைந்து வருந்தும் என மொழிந்து

மறைகின்ற சுடரையுடைய மாலையால் வருத்தத்தை யுடைய காம நோயில் அழுந்துபவளைக் குடிமக்களைப் பாதுகாத்துப் பின்பு தன்னைக் காக்கும் பாண்டியனின் அகன்ற படையைவிட விடப் பகைவர் நீங்கியது போல், பிரிந்து போனவர் வந்து தீண்டத் தீண்டப் பசப்பு நீங்கியது. இஃது இருந்தவண்ணம் என்னே என்று வாயில்கள் தமக்குள் கூறினர்