பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

241


322. காதலன் ஊசலை ஆட்டினான் பெருங் கடற் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என் திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த அருந் துயர் நீக்குவேன் போல்மன் - பொருந்துபு பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண் கண், நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய் தாக்கி இன மீன் இகல் மாற வென்ற சின மீன் எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின் யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப, தாழாது உறைக்கும் கட மலர்த் தண் தாழை வீழ் ஊசல் தூங்கப் பெறின். மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் கடைஇயான் இகுப்ப, நீடு ஊங்காய், தட மென் தோள் நீத்தான்் திறங்கள் பகர்ந்து. நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி? இரவு எலாம் நல் தோழி நடனின - என்பவை வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என் மேனி சிதைத்தான்் துறை. - மாளிவீழ் இருங்கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண் தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் தேயா நோய் செய்தான்் திறம் கிளந்து நாம் பாடும் சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை.

பார்த்து உற்றன, தோழி! பா. து உற்றன தோழி! இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன - என்பவை 'தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்?’ என, இன் துணை அன்றில் இரவின் அகவாவே அன்று, தான்் ஈர்த்த கரும்பு அணி வாட, என் மென் தோள் ஞெகிழ்த்தான்் துறை.