பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம் திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை இரைஉயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும் அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை. அருளினகொல் தோழி? அருளின்கொல், தோழி? இரவு எலாம், தோழி! அருளின - என்பவை கணம் கொள் இடு மணல் காவி வருந்த, பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை. என, நாம் பாட, மறை நின்று கேட்டணன், நீடிய வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை யான் என உணர்ந்து, நீ நனி மருள, தேன் இமிர் புன்னை பொருந்தி, தான்் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே. - கலி 131 பார்க்குங் காலத்து அந்தப் பார்வையால் மற்றவர்க்கு வருத்தத்தை உண்டாக்கும் இணையான பூவின் அழகுடைய கண்ணையுடையவளே! நற்சாயலை உடையவளே, இனமான மீன்களின் மாறுபாடு கெடத் தாக்கி வென்ற சினமுடைய மீனான சுறா, கொம்பால் செய்த பல கையைக் கோத்துப், புற இதழ் ஒடித்த நெய்தற் பூவை நீண்ட நாரில் கோத்து அழகுடையதாய்க் கட்டி, கையால் இயக்கப்படும் யாழின் ஒசையைத் தன்னிடம் கொண்ட வண்டுகள் ஒலித்துப் பாட, தேன் துளிக்கும் வளைவையுடைய தாழையின் விழுதால் திரித்து அமைக்கப்பட்ட ஊசலை நீ அமர்ந்து ஆடுவாய் அங்ங்னம் ஆடப் பெற்றால், கடல் செய்வத்தை முன்னிருத்தி 'உன்னைப் பிரியேன்” என்று உன்னைத் தெளிவித்து நின் தோள்களைக் கூடிய தலைவன், தான்் அரியவனாய்ச் சிறிது காலம் மறந்திருந்ததால், உனக்கு உண்டாகிய அரிய வருத் தத்தை நான் அவன் எதிர் நின்று தீர்க்க வேண்டியுள்ளது போல் விளங்குகின்றது என்று தோழி சொன்னாள்

(ஊசல் சுறாமீனின் மருப்பினால் ஆன பலகை வரிசை யாய்க் கோக்கப்பட்டது; நெய்தல் மலர் மாலை சூட்டப்