பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


கலங்கள் சூழ்ந்து நிற்கும் இத்தகைய தெளிந்த கடலை யுடைய சேர்ப்பனே

(பறவைகள் பகைவர் படைக்கு உவமை மரக்கலங்கள் யானைக்கு உவமை)

மாந்தளிர் போன்ற சிறந்த நலத்தை இழந்து புன்னையை உடைய சோலையில் இவளைப் புணர்ந்திருக்க, ‘நல்ல நெற்றியை உடையவளே, யான் பிரிவேன் என்று நீ அஞ்ச வேண்டா என்று தெரிவித்ததனால் உள்ள பயன் அன்றோ!

அழகு குன்றிக் கெட்டு நெடுங்காலம் விளக்கம் செய்யாத மணியை ஒத்தவளின் திரண்ட நெடிய மென்மையான தோளின் வளைகள் கழன்றன பல மலர்களையுடைய நறு மணச் சோலையில் குற்றமற்று அவனைப் புணர்ந்திருக்கச் சில மொழிகளை உடையவளே, நின்னை நான் பிரியேன், தெளிவாய்' என்று தெளியச் செய்ததால் உள்ள சிறப்பே அன்றோ! (சிறப்பு என்றது இகழ்ச்சி)

அணிகலன்களைப் பொறுக்க மாட்டாத தனது மென்மை யான இடையினால் அணிகலன்கள் அணியாமல் பூ பூத்தல் மாறப் பெற்ற கொடியைப் போன்றவள், பிறர் இக் கள வொழுக்கத்தை அறியாமல் மறைத்து மருந்தினால் போக்கப் படாத காம நோயில் அழுந்தியது, அடும்புக் கொடி பரந்த இடு மணலில் கூட விளையாடி நீ புணர, கொடுங் குழை அணியை அணிந்தவளே, உன்னை நான் பிரியேன், அறிவாயாக’ என்று கூற, அதை மெய் என்று எண்ணியதால் அன்றோ!

தனக்கு வலிமையை அளிக்கும் என்று எண்ணி வழி பட்ட தெய்வத்தை அடைக்கலமானவர்க்கு நெஞ்சு வருந்தும் நோய் மிகுமாறு வருத்தமாகிய தன்மை போல், நின்னைத் தனக்கு வலி என வழி பட்ட என் தோழியை நீ செய்த பழி என்று எங்கும் பரவி, அலர் தூற்றுகையால் ஏற்பட்ட நினைவு வருத்த, நீங்குவது கொடியதாகும் என்று சொல்லித் தோழி தலைவியை மணந்து கொள்ளும்படி தலைவனைத் துண்டினாள்

324. தோழியின் அறிவுரை! மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,