பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

23


யில், இவளுடைய பெரிய தோள்கள் களவில் ஒழுகிய காலத்தில் நினக்கு இனியவற்றைச் செய்து பின்பு அதை விடுத்து நினக்கு வெறுப்பனவற்றைச் செய்தன” என்று தோழி தலைவனுக்குச் சொன்னாள்.

42. மாந்தளிர்மை மாறிற்று எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த் தனிக் குருகு உறங்கும் துறைவற்கு இனிப் பசந்தன்று - என் மாமைக் கவினே. - ஐங் 144 . “எக்கரில் நின்ற ஞாழலின் மலர்க் கொத்துகள் பொருந்திய சோலையில், துணையிற் பிரிந்து தனிமை அடைந்த குருகு உறக்கம் கொள்ளும் துறைவன் பொருட்டாக, இது காறும் நிறம் ஊரப்பெற்று அழகு குன்றாதிருந்த என் மாந்தளிரின் தன்மையை உடைய அழகு இப்போது பசலை எய்துவ தாயிற்று” என்று தலைவி தன் தோழிக்குச் சொன்னாள்.

43. வருத்தம் போக்கினன் எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ் சினை ஒதம் வாங்கும் துறைவன் மாயோள் பசலை நீக்கினன், இனியே! - ஐங் 145 “மணல் மேட்டு புலிநகக்கொன்றை சிறிய இலை களையுடைய பெரிய கிளையைக் கடல்நீர் பெருகி வந்து வளைக்கும் துறைவன், இப்போது மாமை நிறம் கொண்ட தலைவி அடைந்த பசலை நோயை நீக்கலானாள்” என்று தோழி தலைலி கேட்கும்படி சொன்னாள்.

44. நிறயழகு இனியது எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் நறிய கமழும் துறைவற்கு இனியமன்ற - என் மாமைக் கவினே. - ஐங் 146 தலைவி, ‘மணல் மேட்டில் உள்ள ஞாழலின் அரும்பு முற்றி மலர்ந்த மலர்க்கொத்துகள் நறுமணம் கமழும் துறைவன் பொருட்டு என் நிறயழகு தெளிவாக இனிமை யுடையன ஆயின” என்று தோழிக்குச் சொன்னாள். v.