பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அறிவு என்று சொல்லப்படுவது அறியாதவர் தம்மைப் பார்த்துச் சொல்லும் சொல்லைப் பொறுத்தலேயாகும்.

ஒருவரோடு ஒருவர்க்கு உறவு என்று சொல்லப்படுவது கூறிய ஒன்றைத் தாம் மறவாதிருத்தலேயாம். -

நிறை என்று சொல்லப்படுவது மறைத்த ஒரு செய்கை பிறர் அறியாமல் ஒழுகுதலேயாம்

முறை என்று சொல்லப்படுவது நம்முடையவர் என்று கண்ணோட்டம் செய்யாது அவர் செய்த குற்றத்துக்கு ஏற்ப அவரது உயிரைப் பறித்தலேயாகும்

பொறை என்று சொல்லப்படுவது பகைவரைத் தக்க காலம் வரும் வரை பொறுத்திருத்தலேயாகும்

அவற்றை நீ அறிந்து ஒழுகுவீராயின், அந்த ஒழுக்கத் துக்கு ஏற்ற ஒன்றைச் சொல்வேன் நெய்தல் நிலத்தலைவ!, என் தோழியின் நல்ல நெற்றியின் நலத்தை நுகர்ந்து அவளைத் துறத்தல், இனிய பாலை உண்பவர், பாலை உண்டு அதனைக் கொண்டிருக்கும் கலத்தைக் கவிழ்த்து விடுதல் போன்றதன்று ஆதலால் நின்னால் வருத்தப்பட்டவள் துன் பத்தை அவளை மணந்து கொண்டு போக்குவாயாக. அங்ங்னம் போக்குவதற்கு நின் தேர், குதிரையைப் பூண்பதாகுக எனத் தெளிவித்து வரைவு கடாயினாள் .می 325. விரைய நீங்கியது நிரை தொடி துயரம்: மல்லரை மறம் சாய்த்த மலர்த் தண் தார் அகலத்தோன், ஒல்லாதார் உடன்று ஒட, உருத்து உடன் எறிதலின், கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின், இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல, பெருங் கடல் ஒத நீர் வீங்குபு கரை சேர, யோஒய வண்டினால் புல்லென்ற துறையவாய், பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப, ஒருநிலையே நடுக்குற்று இவ் உலகெலாம் அச்சுற, இரு நிலம் பெயர்ப்பு, அன்ன, எவ்வம் கூர் மருள் மாலைதவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே,