பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

249


கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி, அவலம்மெய்க் கொண்டது.போலும்அஃது எவன்கொலோ? நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே, நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி இடும்வை நோய்க்கு இகுவனபோலும் அஃது எவன்கொலோ? வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின், கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, மையல் கொள் நெஞ்சோடு மயக்கத்தால், மரன் நோக்கி, எவ்வத்தால் இயன்றபோல், இலைகூம்பல் எவன்கொலோ? என ஆங்கு கரை காணாப் பெளவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன் திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு, விரைவனர் காதலர் புகுதர நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே. - கலி 134 பகையாக வந்த மல்லரை அழித்த மலர்ந்த மாலையை அணிந்த திருமார்பை உடைய திருமால் தன் பகைவர் எல்லாரும் சேர வந்து சினந்து தன்னை எதிர்த்தலால், அவரைச் சினந்து ஒடும்படியாய் அவர் ஏறி வந்த யானை யின் நெற்றியில் அழுத்திய சகடம் போன்று, ஞாயிறு தான்் பரப்பிய கதிர்களைத் தன்னிடம் சுருக்கிக் கொண்டு பெரு மலையைச் சேர்ந்து மறையும் அதனால் பெரிய கடலில் ஒதம் ஏறும் நீர் மிக்குக் கரையைச் சேர்தலால், கழியில் உள்ள பூக்களினின்றும் போன வண்டுகளால் பொலிவு அற்ற துறை யில் உள்ள உறங்குவன போல், அந் நீர் நிலையின் மலர்கள் யாவும் வாய் குவியும் அக் காலத்தில் கடல் ஒலிக்க இவ் வுலகம் எல்லாம் ஒருசேர நடுக்கம் அடைந்து அச்சம் கொள்ளும்படி தான்் படைத்த இவ் உலகினை மீண்டும் தன்னிடம் ஒடுக்கித் கொள்ளும் தன்மையைப் போன்று தோன்றும் இத்தகைய பிரிந்தார்க்கு வருத்தம் மிகுவதற்குக் காரணமான மாலைப் போது அக் காலத்தில் -

எனக்குக் கெட்ாத காமநோயைச் செய்தவரைக் கண்ணால் காணாமல் என் மனம் நினைக்கையினால், அது தனக்கு இடமாகக் கொண்டு மாறுபாடுகளைத் தரும் பனிக் காலம்