பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அறிவைத் தின்கின்றது அதனால் அப்போதே வருத்தத்தில் அழுந்திப் பல எண்ணங்களையுடைய தெஞ்சையுடைய நான், கலக்கத்தைத் தரக் கடல் அதைப் பார்த்து எனது இந்த அவலத்தைத் தன் உடலில் கொண்டது போன்று கூப்பிடு கின்றது. இதற்குக் காரணம் என்னவோ?

எனக்கு நடுங்கும் காம நோயைத் தந்தவர் அருளவில்லை அதனால் என் மனம் அவரை நினைக்கையினாலே, அதைக் கண்டு கடிய பனிக்காலம் மிகுந்து வர, அதனால் யான் செயலறவில் அழுந்த, மணல் குன்று அதை நோக்கி நடுங்கும் துன்பத்தில் உழந்து, என் நலத்தை இழந்தேன். இத்தகைய எனது இடும்பையைத் தரும் நோய்க்குத் தான்் கரைந்து தாழ்பவை போல் இருப்பதற்குக் காரணம் யாதோ?

இரந்து வருத்தம் தீராமல் என்னை வைத்து, என் தலத்தை உண்டார் அவர் இங்கு வரவில்லை. அதனால் என் மனம் அவரை நினைத்தது அதைக் கண்டு பனிக்காலம் வருத்த, அது கண்டு அப்போதே மயக்கத்தால் செயலற்ற நெஞ்சினள் ஆனேன் இத் தன்மையுடைய நான் கலக்கத்தில் அழுந்த, மரம் அதை நோக்கி வருத்தத்தால் செய்யப் பட்டவை போல் மயக்கம் கொண்ட நெஞ்சுடன் இலைகள் குவிவதற்குக் காரணம் என்னவோ? என்று இவர் கூற கரை காண இயலாத நடுக்கடலில் மரக்கலம் சிதைந்து அழுந்துபவன், திரை கொண்டுவந்து தர, ஒரு தெப்பத்தைப் பெற்றுப் பின்னர்த் தீதின்றிப் பிழைத்தது போல், இவளது காதலர் விரைவாய் வந்து சேர, துன்பம் யாவும் விரைவாய் நீங்கின. அதைக் காணிர் என வாயில்களாய் வந்தோர் தங்களுக்குள் கூறிக் கொண்டனர் - o

326. விரைவாய்ச் செலுத்துக தேரை துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி இணை திரள் மருப்பாக எறி வளி பாகனாஅயில்திணி நெடுங்கதவு அமைத்த அடைத்து, அணி

கொண்ட எறில் இடு களிறே போல இடு மணல் நெடுங் கோட்டைப் பயில்திரை, நடுநன்னாள், பாய்ந்து உறுஉம் துறைவ! கேள்: