பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

251


கடி மலர்ப் புன்னைக் கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடி நெகிழ்ந்த தோளாளத் துறப்பாயால்; மற்று நின் குடிமைக்கண் பெரியது ஒர் குற்றமாய்க் கிடவாதோ? ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை நோய் மலி நிலையளாத் துறப்பாயால்; மற்று நின் வாய்மைக்கண் பெரியது ஒர் வஞ்சமாய்க் கிடவாதோ? திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திரு நலம் தோற்றாளை இகழ் மலர்க் கண்ணாளாத் துறப்பாயால்; மற்று நின் புகழ்மைக்கண் பெரியது ஒர் புகராகிக் கிடவாதோ? என ஆங்கு - சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே, அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து, மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கு ஒலி நெடுந் திண் தேர் கடவுமதி, விரைந்தே.

- - கலி 135 வேல் வைத்துச் செறிக்கப்பட்ட பெரிய கதவாய்ச் சமைத்து அதனால் அடைத்துள்ள மதிலைக் குத்தும் ஆண் யானை போல், மணற்குன்றின் பெரிய உச்சியைப் பொருந்திய அலை, காற்றே பாகனாக, துணையைக் கூடி எழும் தூய நிற முடைய வலம்புரிச் சங்குகள் இரு கொம்புகளாய், நள்ளிரவில் குத்தி, யானை போல் முழங்கும் துறைவனே, கேட்பாயாக:

மணம் பொருந்திய புன்னை மரத்தின் கீழ் உன்னைப் புணர்ந்ததால் இவள் தன் அழகு தோற்றாள் இவளை நீ தொடி கழன்று விழும் படியான தோளையுடையவளாய் ஆகும்படி நீ கை விடுவாயானாய் -

அவ்வாறு கை விடுதல் நினது குடிமையிடத்துப் பெரிய குற்றமாய்த தங்கி விடாதோ?

அழகிய மலர்களையுடைய புன்னை மரத்தின் கீழ் உன்னை இவர் புணர்ந்தாள், அதனால் தன் அழகு கெடப் பெற்றாள் காம நோய் மிகுபவள் ஆனாள் இத் தகையவளாய் ஆக நீ இவளைக்கை விடுவாயாய் உள்ளனை அவ்வாறு கை விடுவது நின் மெய் கூறுதலில் (சூள் உரைத்தலில்) பெரியதோர் பொய்யாய் ஆகி விடாதோ?