பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

255


தோழியே! நம்முடைய நாணத்தை நம்மிடத்தில் நிறுத்து வோம் என்று உணர்ந்திருத்தல் அரிது. அதன் காரணம் என்னவென்றால் வேட்கை பெரிதாக உள்ளது. அதனால் தேய்ந்த உயிர் மிகவும் சிறியதாக இருக்கின்றது. நமக்கு வருத்தத்தைத் தரும் இரவுகளும் பல உள்ளன. அந்த இரவு களில் உறங்கதாபடி துணையைப் பிரிந்து வருந்தி நம்மோடு பேசும் அன்றில் பறவைகளும் சில உள்ளன. ஆதலால் அந்த உயிர் தாங்குவது அரிது. முடிவில் அவர் நம்முடன் கூடியதால் பெற்ற பயன், இறகை உதிர்த்திட்ட அழகற்ற மயிலைப் போன்று பொலிவற்ற காரணத்தால், நாம் நடுங்கப் படுக்கை யில் கிடந்து உடல் நெருப்பில் ஒட வைத்த பொன்னால் செய்த சிலம்பு முதலியன ஒலிக்கும் படி உலவி வருந்தக் காமத்தீ உண்டாகிய ஒன்று மட்டுமே!

அவர் நெஞ்சம் போல் வலிவுடையதாய் இருப்பதன்றி நம் வலியற்ற நெஞ்சம் வருத்தம் மிகுமாறு உன்னைப் பிரியேன் எனத் தெளிவித்த சொல்லால் வருந்தியது அல்லாது அவர் நம்மை, தொழில் வல்லவனால் செய்யப்பட்ட வடிவு அமைந்த மிக்க விசையுடைய வில்லால் எய்யும் தொழிலைச் செய்வதை உடையவர் அல்லர், என்றாலும் தலைவியே, அவர் தெளிவித்த சொல்லால் பிறந்த நோய் வில்லை விடக் கடிதாக உள்ளது.

‘நகு நயம் மறைத்தல்’ என்ற மெய்ப்பாடு காரணமாய் நாம் கொண்ட நட்பில் உண்டான தகுதிப்பாடுகளால் வருத்துதல் ஒழிய, அவர் நம்மைப் பொருள்களின் தன்மை யால் உண்டான பழைய மாறுபாடு காரணமாய் உண்டான பகையால் வருத்தவில்லை. ஆயினும், தோழியே, அவர் தம் தகுதியால் வருத்துவது நிற்க, அவர் நம்மை வருத்தும் நோய் பகைமையை விடக் கடியதாய் உள்ளது.

'உன்னைப் பிரியேன்” என்று கூறி, என்னைத் தன் அன்பால் பிணித்தவர் மென்மையால் சுடுதல் நீங்க, அவர் நம்மைப் பரந்த இருளை அவ் இடத்தினின்றும் போகுமாறு நீக்கும் நீண்ட கொழுந்தையுடைய தீயால் சுடுதல் இலர். ஆனால் தலைவியே, அவர் அங்குச் செய்த காம நோய், கெடுவதற்குக் காரணமான மென்மையால் நின்று எரியும் காமநோய் தீயைவிடக் கடிதாக உள்ளது.