பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


45. தழையுடைக்கு நாடு நல்கினன் எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் ஒண் தழை அயரும் துறைவன். தண் தழை விலை என - நல்கினன், நாடே. - ஐங் 147 “மணற்குன்றிடம் வளர்ந்துள்ள ஞாழல் மரத்தில் மலர் இல்லாததைக் கண்ட மகளிர், அதன் குழையைப் பறித்து ஒள்ளிய தழை தொடுத்து, அணிந்து மகிழும் துறையை யுடைய தலைமகன், நீ உடுக்கும் தழையுடைக்கு விலையாய் நாடு களைத் தந்தான்்" என்று தலைவிக்குத் தோழியுரைத்தாள்.

46. முயங்குக இனிது எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை வீ இனிது கமழும் துறைவனை நீ இனிது முயங்குமதி, காதலோயே! - ஜங் 148 தோழி, "அன்புடையவளே, மணல்மேட்டு ஞாழலில் ஒங்கும் பெரிய கிளையில் மலர்ந்த மலர்கள் இனிய மணம் கமழும் துறைவனை, நீ நன்றாகப் புணர்ந்து மகிழ்க" என்று தலைவியிடம் இயம்பினாள்

47. வருத்தம் உண்டாக்காதிருக்க! எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு அணங்குவளர்த்து அகறல் வல்லாதீமோ! - ஐங் 149 தோழி தலைவியை நோக்கி, ‘மணல் திட்டில் உள்ள ஞாழல் மரத்தின் மலரைப் போல் தேமல் வளர்கின்ற இளங் கொங்கைகளையுடைய மடந்தையான இவளுக்கு வருத்தம் உண்டாக்கிக் பிரியாது இருப்பாயாக!” என்று சொன்னாள் *

48. இணைந்தாலும் இணையாதவன்! எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ் சினைப் புணரி திளைக்கும் துறைவன் f புணர்வின் இன்னான், அரும் புணர்வினனே. - ஐங் 150