பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


“என் உயிர் பொறுக்கும் எனது எல்லை மீற, பொலி வுடைய நெற்றியையுடையவள் தந்த நிறை என்னும் குணம் அழிதற்குக் காரணமான காம நோயை நீந்தி, உப்புப் பாத்தி யில் இருந்த உப்பு மழைத்துளியை அடைந்த தன்மையைப் போலக் கரைந்தது.

“மூங்கிலை வென்ற தோளையுடையவள் எனக்கு அளித்த பூக்கள் பூளைப் பூவும், பொன் போன்ற ஆவிரம் பூவுமாகும்

“ஒளி பொருந்திய அணியை உடையவள் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாதபடி எனக்குத் தந்த என் இயல்புகள் அழிவதற்குக் காரணமான, வருத்தத்தை உடைய காம நோயால், என் உயிர் அழுந்தி, நெருப்புப் பரவிய நெய்யுள் கிடந்த மெழுகு மெல்லென உருகித் தேய்வது போல, நிலை யில்லாது மெத்தென மெத்தெனத் தேய்கின்றது இஃது எல்லாராலும் அருளத்தக்க தன்மை கொண்டது

"நான் அடைந்த காம நோய்க்கு நான் வருந்தும்படி உரை யாடும் துணை இளைய பிள்ளைகளும் இக் காம நோய்க்கு அப்பாற்பட்டவருமே இவர்கள் தவிர பிறர் இல்லை.

“இவ்வாறு நான் பாட அன்புடைய சொல்லையுடைய வள், அதைக் கேட்டு அருளி அதன் பின் அன்பு கொண்டு வந்து என்னை அளித்தலால், மன வேட்கை அடங்கிய செய்தற்கு அரிய தவத்தை முயன்றவர், தம் உடலை இந்த உலகத்தில் விடுத்துச் சுவற்க்கத்தை இனிதாகப் பெற்றதைப் போல், துன்பத்துக்குத் துணையாக விளங்கிய மடல், இனி இவளைப் பெறும்படியாய் இன்பத்துக்கு இடம் உண்டாகக் கடவன் என்று இரக்கம் கொண்டாள்" என்றான், தலைவன்.

330. துயர் நீத்தல் உம் கடமை! சான்றவிர், வாழியோ சான்றவிர்! என்றும் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்; மான்ற துளி இடை மின்னுப் போல் தோன்றி, இருத்தி, ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் நெஞ்சு ஆறு கொண்டாள் அதற்கொண்டும் துஞ்சேன்,