பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

259


அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப, ஒங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது, பாடவேன், பாய் மா நிறுத்து.

யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப, மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன்தே மொழி மாதர் உறாஅது உறீஇய காமக் கடல் அகப்பட்டு.

உய்யா அரு நோய்க்கு உயவாகும் - மையல் உறிஇயாளள் ஈத்த இம் மா.

கானுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என்

ஆண் ஏழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்மாண் இழை மாதராள் ஏஎர்' என, காமனது ஆணையால் வந்த படை .

காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்எழினுதல் ஈத்த இம் மா.

அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும் வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ

முகை ஏர் இலங்கு எயிற்று இன் நதை மாதர் தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!

அழல் மன்ற, காம அரு நோய், நிழல் மன்ற நேரிழை ஈத்த இம் மா.

ஆங்கு அதை,

அறிந்தனிர்ஆயின், சான்றவிர்! தான்் தவம் ஒரீஇ, துறக்கத்தின் வழிஇ, ஆன்றோர் உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் உயர் நிலை உலகம் உறீஇயாங்கு, என் துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே. - கலி 139