பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

261


“காமம் என்ற கடிய பகை ஆண்மையை உள்ளும் புறமும் அழிப்பதலால் இங்ங்னம் வடிவு கொண்டு தோன்றின எனக்கு அழகிய நெற்றியை உடையவள் தந்த இந்த மடல் மா பரிகாரம் ஆயிற்று” என்றான் -

“முல்லை அரும்பைப் போன்று விளங்கும் பற்களையும் இனிய மகிழ்ச்சியையும் உடைய மங்கையின் அழகால் அவளிடத்தைப் பற்றிக் கொண்ட என் நெஞ்சால் உள்ளத்தைச் சுடப்பட்டு எரியும் காமம் என்னும் தீ என் அரிய உயிர் போகும் தன்மையால் அமையாதே நின்று சுடும், ஐயோ! நான் எங்ங்னம் ஆற்றுவேன்” என்றான்.

“காமம் என்ற பொறுத்தற்கு அரிய நோய் உறுதியான நெருப்பாகும்; ஒத்த அணியை உடையவள் அதற்குக் கழு வாயாகத் தந்த இந்த மடல் மா அதற்கு ஒரு நிழலாக இருந்தது” என்றான் -

“பின் என்னிடத்துப் பொருந்திய வருத்தத்தை நீவிர் அறிந்தீர் என்றால், சான்றோராய் உள்ளிர்! சான்றோர், இவன் தவம் செய்தற்கு உரியவன் என்று கொள்ளப்பட்ட மன்னனை, அவன் தவம் செய்தலினின்று விலக்கித் துறக்கத் தில் செல்வதினின்று தவறுதலால், அவனை அந் நிலை யினின்று மீட்டுத் தவம் செய்வித்து உயர்ந்த துறக்கத்துக்கே போகவிட்டுத் துன்பத்தைத் தீர்த்தது போன்று, என் துயரின் இயல்பைப் போக்குதலும் உம்மிடத்து முறைமையாகும்” என்று சான்றோரை நோக்கிச் சொன்னான் காமுற்ற தலைவன்

331. உமக்குப் புகழும் அறமும் கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது மா என்று உணர்மின், மடல் அன்று மற்று இவை பூ அல்ல, பூளை, உழிஞையோடு யாத்த புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி, அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி, நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம்