பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அத்தயைன்மையன் நான் அல்லேன் இத்தகைய எனக்குப் பூப் போன்ற கண்ணையும் கடைப்பகுதி குழன்ற கூந்தலையும் உடையவள் செய்த காம நோயின் வருத்தத்தை அறிந்திருந்தும் அதனைத் தீர்க்கும் வழியை அறியவில்லை

“கடுமையான வெள்ள நீர்ச் சுழியில் அகப்பட்ட ஒரு வனுக்குக் கரையில் நின்றவர் நீருள் போய் மீட்காமல், 'அஞ்சாதே’ என்று கரையில் நின்று கூறினாலும், அவனுக்கு வருத்தம் தீர்வது உண்டு அது போன்று, அழகிய சீரான பற்களை உடையவள் உண்டாக்கிய இக் காம நோயை அறிந்தும் இவ் ஊரவர் அதைத் தீர்க்க முடியாதவராயினும் கருணை காட்டவும் அறியவில்லையே!

என்னிடம் உண்டாகும் வருத்தத்தை நான் தெரிவித்தேன் இனி இதை நீங்கள் தெளிய ஆராயும் போது என் காம நோய் நீங்கும்படி இருண்ட கூந்தலையுடையவள் எனக்கு அருள் செய்யும்படி செய்வீராயின், அச் செயல் உங்களுக்கு அறமும் புகழும் ஆகும் என்றான் காமுற்ற தலைவன்.

332. அவனுக்கு அவளை தந்தார்! அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் வேட்டவை செய்து, ஆங்கு, காட்டி மற்று ஆங்கே, அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன் திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்றுஅணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி அணி நலம் பாடி வரற்கு. ஒரொருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி நீருள் நிழல் போல், கொளற்கு அளியள் - போருள் அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல் மன்றம் படர்வித்தவள் வாழி, சான்றீர்! பொய் தீர் உலகம் எடுத்த கொடிமிசை, மை அறு மண்டிலம் வேட்டனள் - வையம் புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் இன்னா இடும்பை செய்தாள் அம்ம, சான்றீர்! கரந்தாங்கே இன்னா நோய் செய்யும்; மற்று இஃதோ பரந்த சுணங்கின் பனைத் தோளான் பண்பு?