பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

265


இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும் கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் - வடி நாவின் வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டியவள் வாழி, சான்றீர்! என்று ஆங்கே, வருந்த மா ஊர்ந்து, மறுகின்கண் பாட, திருந்திழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே, பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந் திறை போல, கொடுத்தார், தமர். - கலி 141 “பெறுவதற்கு அரிய மக்கள் உடல், முன் பிறப்பில் உள்ளம் மாறுபட்டு விரும்பிய தீவினைகளை ஆற்றி, அறம் பொருள் இன்பம் எனக் கூறப்பட்ட அந்த மூன்றில் அறம் செய்யாதவர்கள், இந்தப் பனை மடலை ஏறி அவ் ஊரிடத்தே எல்லாருக்கும் காட்டி, ஒரு மங்கையின் அழகைப் பாடி வருபதற்கு நூல்கள் விதிகளைப் கூறின. ஆதலால் நானும் அதனையே துணிந்து மடல் ஏறிப் பாடுவேன் என்று சொன்னான்.

"சான்றோரே! வாழ்க! போரிடும் வெற்றியை உடைய குதிரையின் மீது இருந்து போர்த் தொழிலை நடத்துவோனான என்னை அந்தக் குதிரையல்லாத மடல் மாவிலே ஏறி அந்தக் களத்திலன்றி மன்றில் தன்னைச் செலுத்தியவள், ஒருகால் என் நெஞ்சுள், உள்ளிருந்து பின்பு நீரில் தோன்றிய முழுமதி யினுடைய நிழல் வாங்கிக் கொள்வதற்கு அரியவாறு போல் பெற்றுக் கொள்வதற்கு அரியவளாய் இருக்கின்றாள்” என்றான் “சான்றோரே, கேளுங்கள், உலகத்தை எல்லாம் காக்க முயலும் உள்ளத்தை உடைய என்னை ஒருவரிடம் போய் இரக்கும் இன்னாத வருத்தத்தைச் செய்தவள், கிழக்குத் திக்கில் தோன்றின பொய்யில்லாத நன் மக்கள் உயர்த்திய புகழ்ந்த மாசில்லாத ஞாயிற்று மண்டிலத்தை நான் வாங்கிக் கொள்வதற்கு விரும்பியவளாய் உள்ளாள்

"பரவிய தேமலை உடைய மூங்கில் போன்ற தோளை உடையவள் தான்் மறைந்த போதே பொறுப்பதற்கரிய நோயைச் செய்வாள் அவள் குணம் எக் காலமும் இந்தத் தன்மையுடையதோ?” என்றான்