பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; "287

'எல்லா நீ உற்றது எவனோ மற்று? என்றீரேல், எற்சிதை செய்தான்் இவன் என உற்றது. இது என, எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின் பைதல ஆகிப் பசக்குவமன்னோ - என் நெய்தல் மலர் அன்ன கண்? கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே, ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய, காணான், திரிதரும் கொல்லோ - மணி மிடற்று மாண் மலர்க் கொன்றையவன்? 'தெள்ளியேம் என்று உரைத்து, தேராது, ஒரு நிலையே "வள்ளியே ஆக என நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவ்ர்கொல்லோ ? வளைந்து யான் எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள்

மாந்தர் கூடி கொண்ட கங்குல், கனவினான், தோன்றினனாக, தொடுத்தேன்மன், யான்; தன்னைப் பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய கையுளே மாய்ந்தான்், கரந்து. கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின், அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித் தருகுவைஆயின், தவிரும்-என் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ. மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின், பெளவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை, கைவிளக்காகக் கதிர் சில தாராய்! என் தொய்யில் சிதைத்தான்ைத் தேர்கு. சிதைத்தான்ைச் செய்வது எவன் கொலோ? எம்மை நயந்து, நலம் சிதைத்தான்். மன்றப் பனைமேல் மலை மாந் தளிரே! நீ தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ? மென்தோள் ஞெகிழ்த்தான்் தகைஅல்லால், யான் காணேன்'நன்று தீது என்று பிற.