பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

25


தலைவி, "கடற்கரையில் உள்ள ஞாழல் மரத்தின் நறுமண மலர்கள் பொருந்திய பெரிய கிளையைக் கடலின் திரைகள் வந்து கலக்கும் துறைவன் புணர்ச்சியிலும் துன்பமே விளைத்தலால், இன்று நம்மைப் புணர்ந்தாலும் புணராத வனே ஆவான். ஆதலால் நீ அவளை வினவுவதில் பயன் ஒன்றும் இல்லை" என்று தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொன்னாள்.

வெள்ளைடநாரை 49. உடைந்தது நெஞ்சம்!

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்,

காணிய சென்ற மட நடை நாரை

மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல்

கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு

நெக்க நெஞ்சு நேர்கல்லேனே. - ஐங் 151

தலைவி,"வெள்ளாங்குருகின் குஞ்சு வினைத் தன் பார்ப்பு என்று எண்ணி அதைப் பார்ப்பதற்குச் சென்ற மடப்பம் பொருந்திய நடையையுடைய நாரை தன் காலால் மிதிப்ப, அதன் காரணமாக இதழ் விரியப் பெற்ற, கண்ணைப் போலும் நெய்தல் மலர்கள் தேன் மணம் வீசுதல் குறையாத துறைவன் பொருட்டாக என் நெஞ்சு உடைந்தது. ஆதலால் யான் அவற்குத் துதாகச் செல்லுதல் ஆற்றேனாயினேன்” என்று தோழியிடம் உரைத்தாள்.

50. அறவன், அருளன் வெள்ளங்குருகின் பிள்ளை செத்தெனக், காணிய சென்ற மட நடை நாரை கையறுபு இரற்று கானல்அலம் புலம்பந் துறைவன் வரையும் என்ப; அறவன் போலும், அருளுமார் அதுவே. - ஐங் 152 தலைவி "வெண் நாரையின் குஞ்சுவினைத் தனது பார்ப்பு என்று எண்ணி அதனைப் பார்ப்பதற்குச் சென்ற மடப்பம் உடைய நடைபொருந்திய நாரை செயலற்று ஒலித்தலைச்