பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


நோய் எரியாகச் சுடினும், சுழற்றி, என் ஆய் இதழ் உள்ளே கரப்ப்ன்-கரந்தாங்கே நோய் உறு வெந் நீர், தெளிப்பின், தலைக் கொண்டு வேவது, அளித்த இவ் உலகு. மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின்-சான்றீர்!நலிதரும் காமமும் கெளவையும் என்று, இவ் வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை நலியும் விழுமம் இரண்டு. எனப் பாடி, இணைந்து நொந்துஅழுதனள், நினைத்த நீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல்லிரா நல்கிய கேள்வன் இவன்-மன்ற, மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம்கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து, நலம் பெற்றாள் நல் எழில் மார்பனைச் சார்ந்து. - கலி 142 இது கண்டோர் கூற்று ‘கேட்பீராக! இவளுடனே விளையாடும் ஆயத்தார் எல்லாம் ஒன்று கூடி விளையாடும் அளவிலும் முள்ளைப் போன்று கூர்மையான தன் பல்லினது ஒளி தோன்றாமல் சிரிப்பதை உள்ளடக்கி, அச் சிரிப்பதற்குக் குறிப்பு - பிறர் அறியாமல் தன் கண்ணாலும் முகத்தாலும் சிரிப்பவள்; இப்போது பெண் தன்மை இன்றிப் பிறர் கேளாது சொல்லும் மென்மையான சொற்களை எல்லாரும் கேட்குமாறு சொல்லி, வரிசையான வெண்மையான முத்தாம் மேற் பற்கள் தோன்றப் பெரிதாய்ச் சிரித்து, சிரித்த அப் போதே பூ வெடித்த தன்மையைப்போன்ற புகழ்ச்சியுற்ற தன் விழிகள் இமை நீர் மல்குமாறு அழுவாள்.

இவள் இங்ங்னம் அழும்படிக் காம இன்பத்தை ஊழானது ஒருவரது மனம் ஒருவரிடம் புரிதல் உண்டான புணர்ச்சி தழுவிக் கொள்வதில் நிறைவு பெறாத அளவிலேயே இருவரில் ஒருவரை அரியராகும்படிச் செய்து நீக்குகிறது அதனால் இந்த நிலைமையை ஆராய்வாரிடத்து அஃது உறுதியாக யாழில் நரம்பு வீக்குதலைச் செய்ய அதனிடத்துத்