பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

269


தோன்றிய பண்ணுள், இனிமையைச் செவியால் கேட்டு இன்பம் அடைவதற்கு முன்பே விருப்பம் கொண்ட இனிமை என்ற பொருள் கெட்டுப் போக அறுகின்ற நரம்பினை விடப் பயனற்றுப் போயிற்று.

(இது முதல் வரும் அடிகள் அவளது கூற்றைக் கண்டோர் தாம் மேற்கொண்டு கூறுவது) "ஓ! இவளது அல்லலையுடைய குணம் நம்மை வருத்தும் என்று அறியாதே இவளைக் குறுகினோம்.

“அங்ங்னம் குறுகிய நாம் இதை முடியக் காண்போம் என்று எண்ணி வந்தீர், நீங்கள் என்ன செய்தீர்? என்னை இகழ் கின்றீரோ! இகழ்வீர் என்றால் யான் அடைந்த வருத்தத்தை எனக்குச் செய்தவனின் மாயத்தைச் செய்த மலர்ந்த மார்பை நான் முயங்கி அவனைச் சேரப் பெற்றாலும் அஃது இகழ் வானது அன்று. இவ்வாறு என்னைச் சிதைத் தலைச் செய்த வன் இவன் என்று நான் முன்னம் சொன்னதைக் கேட்டீர் நீவிர் 'அவனால் அடைந்ததுதான்் எத்தன்மை யுடையது? என்று கேட்பீரானால், நான் அடைந்தது இதுவென, ஏழு வகைப்பட்ட அறத்தோடு நிற்கும் நிலைகளில் ஒன்றை உம் நெஞ்சத்துக்குச் சொல்லும் என் உள்ளத்துக்கு உண்டானால் நான் இங்ங்னம் வருந்துவேனா? வருந்த மாட்டேன். அந்த அறிவு கெட்டதால் யான் அடைந்த வருத்தம் இத்துணைய வருத்தம் என்று உங்கட்குச் சொல் வேன். அதைச் சொல்லக் கேளுங்கள்!” என்று சான்றோரைப் பார்த்துக் கூறுகின்றாள்.

“என் சிற்றிலில் கூடல் இழைத்து அவனைக் கூடு வேனோ என ஆராய்கின்ற நான் அந்தக் கூடலில் ஒரு பகுதியை இழைத்த அளவில் அந்த ஆராய்ச்சி வேறொன்றான வளைவு தன்னிடத்தில் முழுவதும் கூடப் பெறாத இளம்பிறையைக் கண்டேன். கண்டு அந்தப் பிறை பின்பு முழு மதியாய் ஆகி வருத்தும் என்று எண்ணினேன். நான் உடுத்திய துகிலால் அதை மூடிக் கொள்ளும் நான். அதை அகப்படுத்தினால் நீலமணியைப் போன்ற திருக்கழுத்தை உடைய சிவன் அப் பிறையைச் சூடிக் கொள்ள எண்ணி அஃது எங்கே எனத் தேடுவானோ என்று நினைத்தேன். அதனால் நெஞ்சே, இது பின்பு வருத்தம் என ஆராய்ச்சி இன்றி இதை அச் சிவனுக்குக்