பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


கொடுத்து உதவி செய்த்தாய் ஆகுக யர்ம் தெளிவுடையோம் என்று சொல்லி நெஞ்சை வலியுறுத்தி அதைக் கைவிட்டு, பின்பும் அவர் வருவாரோ, வரின் நான் அவர்க்கு உடம் படாது அவரை இகழ்ந்திருப்பேனோ? என்று நினைத்துச் சூழ்ந்த இருளையுடைய ஊர்க் காவலர் காவலையுடைய இரவில் கனவில் வந்து நான் எண்ணியபடியே தோன்றினான் நான் அவனை வளைந்து பிடித்துக் கொண்டேன். ஆனால் பயன் யாது? நான் அவனைப் பிடித்துக் கொண்டதாக எண்ணி மெல்ல விழிக்க, நான் பிடித்த கையுள்ளே மறைந்து தோன்றாமல் போய் விட்டான் இனி ஞாயிற்றைக் கொண்டே (பகலில்) அவனைக் காண்பேன் என நினைத்து இருந்தேன்

மறுநாள் மாலையில் ஞாயிற்றை நோக்கிக் “கதிர்களைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுக்காத ஞாயிறே! நின் அந்தக் கதிர்களுடனே மறைமலையை அடைவாயானால், அவரை நினைத்துத் தேடிப் பிடித்து என் முன்கொண்டு வந்து நிறுத்தி, என் கையில் நின் கையை நீட்டித் தவறாது தருவாயானால், உயிரே திரியாய், என் நெஞ்சம் என்ற அகலில் ஏற்றிய காமத்தி அவியும் என்றேன் அதற்கு அஞ் ஞாயிறு விடை கூறாது மறைமலைக்கே போனது அங்ங்னம் போவதால் அதைப் பார்த்து, களங்கம் இல்லாத சுடரே, மறைமலைக்குச் சேர் கின்றாயாயின் நீ கடலின் நீரில் மீண்டும் தோன்றிப் பகற் பொழுதை உண்டாக்கும் அளவும், தொய்யிற் கோலம் எழுதுபவனை எழுதாமல் விட்டவனை நான் தேடுவேன். நான் தேடும்படி உன் கதிர்களை எனக்குக் கை விளக்காய் அமையப் பகுத்துத் தருவாயாக’ எனச் சொன்னேன் அஞ் ஞாயிறும் தான்் அதை எனக்குத் தந்தால் அவனை (தலைவனைக் கண்டு) ஊடல் கொண்டு வருந்தவேன் என எண்ணி அவனைத் தராமல் போனான்

அதையுணர்ந்து அவன் எம்மை முன்பு விரும்பிப் பார்த்த பின்பு என் நலத்தைச் சிதைத்தான்் இவ்வாறு சிதைத்தவனைக் கண்டால் நான் கூடாமல் என்ன செய்வது? என்று எண்ணி மறைமலையில் விழும் போது மன்றத்தின் பனை மேல் தோன்றும் மலையில் மாந்தளிரைப் போன்ற நிறம் கொண்ட வெயிலே, என் மென்மையான தோளை மெலியச் செய்த