பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

271


வனின் வடிவழகின் தன்மையை யான் விரும்பிக் காண்ப தல்லது அவன் செய்த நன்மை தீமை ஆகிய எவற்றையும் காணேன் என்னை அல்லாது கூடுவதல்லாது ஊடல் கொண்டிருந்தார் என்று கேட்டு அறிந்ததுண்டோ எனச் சொன்னேன் அவ்வாறு சொல்லி, காம நோய் என் மனத்தைச் சுழலுமாறு செய்தது; நெருப்பாய் நின்று சுட்டது. ஆனாலும் அதைத் தோன்றாமல் மனத்துள்ளேயே மறைப்பேன் அதை மறைத்தாற் போல அழகிய மலர் இதழ் போன்ற கண் கொண்ட காம நோயை அடையும் வெப்பமான நீரையும் மறைப்பேன் அதற்குக் காரணம் யாது என்றால் அதைத் தெளித்தால் இந்த உலகம் வேகும் அதனால் மறைத்தேன் என்று நான் ஆற்றிய அருமையையும் சொன்னேன் இது காறும் யான் அடைந்த வருத்தம் இது தான்் என்று நின்ற சான்றோரை நோக்கிக் கூறினாள். பின்பும், “சான்றோரை வருத்தும் காமமும் கெளவையும் எனக் கூறப்படும் இரண்டு துன்பம் உயிரே காவடி மரமாக இரு பக்கத்தும் தொங்கி என்னை வருத்துகின்றன. இதனை உயிர் மெலியும் அளவும் வலிதில் பொறுத்துக் கொண்டேன் இனி இறப்பதற்கு முன்னம் இதனைப் போக்குவீராக எனச் சொன்னாள் என்று இப்படிச் சொல்லி, பகலும் இரவும் கூட்டம் இல்லாமல் கழிந்தன என எண்ணி வருந்தி அழுதாள் நீள நினைத்து உயிர்த்தாள் அதன் பின் விளக்கம் பொருந்திய இரவில் வந்து மணந்து கொண்டகேள்வனின் நல்ல மார்பினைப் புணர்ந்தாள். தேய்க்கும் காலத்தில் சிதைக்கும் தேற்றாவின் விதையைக் கொண்டு கலத்தில் மெல்லத் தேற்றக் கலங்கிய நீர் தெளிவது போல் தன் சிதைவு தெளித்த பழைய நலத்தைப் பெற்றாள்

ஆதலால் யாமும் இவர்களை மணியும் அதில் பிறந்த நீரும் ஒளியும் போல் வேறு அல்லர் என்று துணியக் கடவோம்

இவ்வாறு கண்டவர் உரைத்தார்

334. இழந்த நலத்தை ஆடைந்தாள்

“அகல் ஆங்கண், இருள்நீங்கி, அணிநிலாத் திகழ்ந்த பின் பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று

நல் நுதல் நீத்த திலகத்தள், மின்னி