பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

  • அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்

மணி பொரு பசும் பொன்கொல் மா ஈன்ற தளிரின்மேல் கணிகாரம் கொட்கும்கொல் என்றாங்கு அணி செல, மேனி மறைத்த பசலையள், ஆனாது நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா, அஞ்ச அழாஅ அரற்றா, இஃது ஒத்தி என் செய்தாள்கொல்?' என்பீர் கேட்டிமின் பொன் செய்தேன் மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,

அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச, பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான்் அவனை அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும் நிறை உடையேன் ஆகுவேன்மன்ற - மறையின் என் மென் தோள் நெகிழ்த்தான்ை மேஎய், அவன் ஆங்கண் சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு. 'ஒன்றி முயங்கும் என்று, என் பின் வருதிர் மற்று ஆங்கே 'உயங்கினான் என்று, ஆங்கு உசாதீர்; மற்று அந்தோ மயங்கினாள் என்று மருடிர், கலங்கன்மின்இன்உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை என் உயிர் காட்டாதோ மற்று? பழி தபு ஞாயிறே பாடு அறியாதார்கண் கழியக் கதழ்வை எனக் கேட்டு, நின்னை வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் அழியத் துறந்தான்ைச் சீறுங்கால், என்னை ஒழிய விடாதீமோ என்று. அழிதக மாஅந்தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார் தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப, ஆஅம் தளர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின், யாஅம் தளிர்க்குவேம்மன். நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன், இள முலைமேல் தொய்யில் எழுதவும் வல்லன், தன் கையில் சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல பல வல்லன் தோள் ஆள்பவன். 蟻