பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பசிய பொன் ஒளியோ? மா மரத்தின் கொழுந்தின் மீது கோங்கம் மலரின் தாது பரந்த ஒளியோ? என மற்றவர் கூறும் தன் அணி தன் இடத்தினின்றும் நீங்கும்படி தன் மேனியை மறைந்த பசலை உடையாள், அமையாமல் தன் நெஞ்சம் இன்பத்தை அளிக்கும் பொருள்களுடன் அஞ்சி, அந்த இன்பம் நீங்கிய மையை எண்ணினாள் நாணத்தால் பிறர் எதிர் முகம் நோக்காது நிலத்தை நோக்கி நாணத்துடன் செல்ல அஞ்சி அழுதாள் பலவற்றையும் கூறினாள்: தன் குறை பலவற்றையும் சொன்னாள் இவள் ஒருத்தி எத்தகைய வருத்தம் அடைந் தாளோ என்று சொல்கின்றவர்களே! யான் பொன் செய்தேன் நான் அடைந்ததைக் கேட்பீராக:

அப்படிச் சொல்பவள், வஞ்சனையால், தன் வாசித்த யாழின் ஒலியைக் கேட்ட அசுணமாவை இந்த இன்பம் அடைந்தது என்று அருளாது, முன் செய்த வஞ்சனையைக் கெடுத்துப் பின்னை அதன் அரிய உயிர் நீங்கும்படி பறையை அடித்ததைப் போன்று, ஒருவன் முன் வஞ்சித்து இன்பத்தை ஏற்படுத்திப் பின்பு அந்த இன்பம் நீங்கும்படி என்னைக் கைவிட்டு விட்டான். அந்தக் களவொழுக்கத்தால் என் மென்னையான தோளினை மெலியச் செய்தவனை அவன் இருக்கின்ற இடத்தில் போய் வருவதற்கு நீண்ட காலம் ஆயிற்று, எனச் சொன்னாள்.

அங்ங்னம் சொன்னவள் அதைக் கொண்டு வரவும் கூடும் அதனுடன் நீங்களும் கூடி ஒன்பது கண்டமுடைய உலகத்தில் அவனை ஆராய்ந்து நீர் பிடித்துக் கொண்டு எனக்குத் தந்தால், நானும் மற்ற மகளிரைப் போன்று உறுதியாய் நிறை என்ற குணம் உடையேன், ஆவேன் எனவும் சொன்னாள்

அதைக் கேட்டவர் அதற்குப் விடை கொடாமல் பின்னால் வந்தனர் அதனால் இவள் ஒரு நாளிலேனும் அவனைச் சேர்ந்து முயங்குவாள் என்று எண்ணி என் பின் வருகின்றீர் இவ்வாறு உண்மையை உணர்ந்து கொள்ளாமல் கலங்காதே என் இனிமையான உயிரை ஒத்தவனுக்கு யாதொன்றும் தீமை இல்லாமல் அவன் உள்ளமையை அவன் உயிருடன் ஒன்றான எனது உயிர், இங்குக் காட்டாது போகுமோ? அவன் உயிர் தான்் இறந்து பட்டமையை காட்டவில்லையோ? என்றாள்