பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

275


அதைக் கேட்டவர் தனக்கு ஒரு துன்பம் இல்லாது நின்று நின்னை இவ்வாறு வருத்தினவனை ஞாயிறு வருத்தும் என்றார். அதைக் கேட்டு நடுவு நிலை செய்யாமல் உண்டாகும் பழி நீங்கும் ஞாயிறே உலகியல் அறியாதவரிடத்து மிகவும் சினப்பதற்கு விரைவாய்ப் போவாய் என்று இவர்கள் சொல்லக் கேட்டு உன்னை வழிபட்டு நீ அவரை மிகச் சீறாத படி இரந்து கொள்ள வந்தேன். நீ என் மனம் கெடும்படி என்னைக் கை விட்டவனைப் பார்த்துச் சினம் கொள்ளும் படி என்னை நீங்க விடாதே! அதற்குக் காரணம் என்ன வென் றால் நீ அந்தக் காலத்து அவனிடம் மிகவும் சினந்தால் நான் இறக்கும்படி நேரும் எனவும் சொன்னாள். அப்படிக் கூறிய அளவில் கதிரவன் மறைகின்றமையைக் கண்டு பிரிந்தவர்க்கு வருத்தம் தரும்படியாய் மாந்தளிர் போன்ற நிறம் கொண்ட மாலைப் பொழுதுக்கு முன்புள்ள இக் காலத்தில் இந்த ஊரின் மங்கையர் மாலைகளைச் சூடி, ஆடவர் மீது தாம் வைத்த நலத்தைப் பாடி அன்பு காட்டுவர். அவர்களைப் போன்று ஆச்சா மரம் தளிர்க்கும் காட்டில் சென்றவர் மீண்டு வந்தால் நாம் மனம் மகிழ்ச்சி அடைவோம். ஆயினும் என்! அவர் வரக் காணவில்லையே எனவும் சொன்னாள். சொல்லி, யாம் மகிழும் வகை எவ்விதம் என்பீராயின் என் தோளைத் தழுவும் அவன் நெய்தற் பூவைப் புற இதழ் ஒடித்து மாலை யாய்க் காட்டிக் குட்டவும் வல்லவன். மென் தோளில் காமனின் வில்லான கரும்பை எழுதவும் வல்லன். இளைய முலைமீது தொய்யில் குழம்பால் கொடியை எழுதவும் வல்லவன். இவ் வகையால் என் மனம் தளிர்க்கும் என்று அவள் சொன்னாள்.

அவ்வாறு அவள் சொன்ன அளவில் மாலைக் காலம் வந்தது. “அதைக் கண்டு அவனை நினையும் என் மனம் குவிவது போல் நீண்ட கழியின் மலர்கள் குவிய, இரங்கும் என் மனத்தைப் போன்று கோவலர் குழல் ஓசை உண்டாக, அலைவு பெற்ற என் மொழிகள் போன்று வண்டுகள் செவ் வழி பாடி அடங்கக், கெட்டுப் போன என் அழகைப் போல் பகற்காலத்தில் ஒளி மழுங்கக் கலக்கத்துடன் வந்த இயமனைப் போன்று என் மீது மாலைக் காலம் வந்தது. இனி எப்படி நான் ஆற்றவேன்” என்று சொன்னாள்.