பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அங்ங்னம் சொல்லி அம் மாலைப் போதை வரும்படி விட்ட ஞாயிற்றை நோக்கிச் சொல்லலானாள்: "சுடரே! நான் என்ற ஒரு தன்மையில்லாது இங்கு இரவில் வருந்தும்படி போனாய்! நீ அருள் உடையை அல்லை! இத் தன்மையால் நீ வாழ்க!” எனச் சொன்னாள்

சொல்லி, 'இவ் இரவில் நான் இறந்துவிடினும் தீமை இல்லை என எண்ணி, மிக்க நீரையுடைய உலகத்தில் வாழ் கின்ற கேள்வர் இல்லையாயின் தம் கணவர் மேல் உள்ள வேட்கையுடனே இறந்துவிடும் மாட்சிமையுடைய மனத்தைப் பெற்றவர்கள் குற்றம் இல்லாத துறக்கத்தில் போய் அவர்கள் தாம் விரும்பியபடியே அடைவது மெய் என்று நூல்கள் கூறும் என்னின், நானும் அங்ங்னம் அவன் மீது விருப்பத் தோடு போய் அவனைப் பெற்று எங்கும் புகழ் உடையேன் ஆவேன் இனி வருத்தம் இல்லை” எனவும் சென்னாள் சொல்லி, முற்பகல் செய்தான்் பிறன் கேடு, தன் கேடு பிற்பகல் கண்டுவிடும் என்று கூறிய பழமொழி உள்ளது. ஆதலால் நீரில் மலர்ந்த நீல மலர் என்று அவர் புகழ அவர்க்கு அந்த நாளில் அவர்க்கு வருத்தம் செய்த என் கண்கள் இப்போது பீர்க்கின் பூப்போன்று மிகுதியாய்ப் பசலை கொண்டன அதையும், என் வருத்ததையும் பார்த்தும் அருள் இல்லாததால் அவனை எனக்குக் காட்டாது இவ் ஊர் அலர் கூறும்’

"இனி நீங்காத இந்த இடும்பையில் உயிர் காத்தற்கு நானே அரசன் என்று கருதித் தனது உயிரைக் காப்பது போல் உலகத்துப் பெரிய உயிர்களை எல்லாம் தழுவிக் காக்கும் இம் மன்னனும் எனக்கு இனிமையான உயிரைப் போன்ற வனைக் காட்டி எனது உயிரைச் சிறிதும் காவாமல் இருக்கும் தன்மை என்ன பயனை எண்ணியோ? காம நோயினால் மயக்கத்த்ை உடையவன் பல மலைகளைக் கடந்து போனான் அவன் மணம் செய்து கொள்ள வந்து பணிந்து தன்னடியைச் சேர்ந்தான்் அதனால் பாண்டியனை உறவாக அவன் உள்ளத்தைத் தெளிவித்த நாட்டவர் இன்பம் அடைந்து வாழ்வது போல் அவனால் இழந்த நலத்தை அக மகிழ்ச்சி யுடன் அடைந்தாள் இஃது என்ன வியப்பு” என்று கண்டவர்

கூறினர்