பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

277


335. நீங்கியது காம நோய்

நன்னுதாஅல், காண்டை நினையா, நெடிது உயிரா! என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல்மாண் நகுதரும் தன் நானுக் கைவிட்டு, இகுதரும் கண்ணிர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி, அன்ன இடும்பை பல பெய்து, தன்னை வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல் தெருளும் மருளும் மயங்கி வருபவள் கூறப கேளாமோ, சென்று 'எல்லா நீ என்அணங்கு உற்றனை யார்நின் இது செய்தார்? நின் உற்ற அல்லல் உரை என, என்னை வினவுவீர் தெற்றெனக் கேண்மின்; ஒருவன் 'குரற்கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர் என்று மருவு காட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு. எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி. பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்:எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டிமோ?

காட்டியாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்; வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் - மதி திரிந்த என் அல்லல் தீராய்எனின். என்று, ஆங்கே, உன் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு வெண் மழை ஓடிப் புகுதி, சிறிது என்னைக் கண்னோடினாய் போறி, நீ. நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள் ஒடுவேன், ஒடி ஒளிப்பேன், பொழில்தொறும் நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்? ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு உதுக் காண், எம் கோதை புனைந்த வழி.