பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


அவன் தழுவின இடத்தே அகப்பட்டு நின்று விட்டது இனி அவன் இருக்கும் இடம் எங்கும் தேடித் தெரிந்து என் மனத்தை என்னிடத்தே கூட்டிக் கொள்வேன் என் உரைத்தாள்

அவ்வாறு உரைத்து, மாலை பொழுதில் துன்பத்தை அடைந்து உரைத்தவள், இனி இப்போது தான்் தேடுவது அரியதாகும் எனக் கருதினாள் திங்களைக் கண்டு அதனுடன் செறிந்த முயல் தேடித் தரும் என்று என்று எண்ணினாள் மிகுந்து எழும் கரிய கடல் சூழ்ந்த உலகம் எல்லாம் பார்த்துத் திங்களுள் விளங்கியிருந்த குறிய முயலே அறிவு வேறுபட்ட என் நெஞ்சை நான் தேடிக் கொள்ள எண்ணிய வருத்தத்தை நீ கூட்டித் தருதல் வேண்டும் அங்ங்னம் தாராயானால் யான் வாங்கிக் கொள்ளும்படி இந்த உலகத்தில் எம் காதலன் உள்ள இடத்தை எனக்குக் காட்டுவாய் நீ காட்டாயானால் உனக்குப் பகையான நாயை உன்னிடம் ஏவுவேன் அது அல்லாது வேட்டுவர் உள்ள இடத்தில் போவேன்; ஒரு முயல் திங்களில் இருக்கிறது எனச் சொல்வேன். அதுவே அல்லாமல் நீ உள்ள திங்களுடன் உன்னை வருந்திடப் பாம்பைச் செலுத்துவேன் என்று மாலைக் காலத்தில் தன் நெஞ்ச வருத்தத்தைச் சொன்னாள் அது வெண் முகிலில் மறைவதைக் கண்டு நீ திங்களுடன் வெண் முகிலில் சென்று ஒடிப் புகுகின்றாய். ஆதலால் சிறிது கண்ணோட்டம் செய்து அவனைத் தேடிப் போவதைப் போன்று உள்ளாய் எனச் சொன்னாள்.

அங்ங்ணம் சொல்லி, அது கரிய கொண்டலில் மறைந்து விடுதலால் அதை நோக்கித் தேடுமாறு அதற்குச் சொல்ல எண்ணி, அக் கள்வன் மறைந்திருப்பனோ என்று காட்டும்படி நீண்ட இலைகளை உடைய தாழைச் செடிகள் பொருந்திய சிவந்த மணலையுடைய கானலில் சோலை தோறும் ஒடிப் போய் அவனை ஒளித்தபடியிருந்து காண்பேன் என்று ஒளிந்தி ருப்பேன் நீயும் ஒளிந்திருந்து தேடுவாய் எனச் சொன்னாள்

அங்ங்னம் கூறிப் பின்னர் அவன் இருக்கும் இடங்களைச் சொல்லத் தொடங்கிப் பூவையுடைய அரும்பு மலரைக் கொண்டு எமக்குத் தரும் மாலையைக் கட்டின இடத்தைக் காண்பாய்!