பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


யாயின் அதற்குக் கைம்மாறாக என் நோயினைக் கூறி உனக்கு ஒரு பாட்டைப் பாடுவேன் என்றாள்

அவ்வாறு உரைத்துப் பாடுபவள் என்னைக் கூடின உறவினர் வந்து சேரும் காலம் இரவோ பகலோ அறியேன் ஆதலால் என்னைத் துன்பப்படுத்தும் பகற் பொழுது போய் இரவு ஆகுக என எண்ணிப் பகற் போதை வெறுப்பேன் அது போய் இரவான காலத்தில் அந்த இரவுக் காலத்தை அப் போதே வெறுப்பேன்!

ஒ கடலே அறமற்ற என் தலைவன் தெளிய என் கண்ணுள் வந்து தோன்றுதலால் கூடிய இமையை விழித்து அவனைப் பிடித்துக் கொள்ள நான் விழித்தேன் விழிக்க அவன் என் மனத்துள் மறைந்து நின்றான் அப்போதே நான் உறங்காத காம நோயை அளிப்பான்

கடலே, ஊரையெல்லாம் தன்னதாக்கிக் கொண்டு மறைந்து கடிய நெருப்பு தன்னை அவிக்கும் நீரைச் சொரியச் சினமாறும் அதைப் போல அல்லாது அருள் அற்ற என் கேள்வன் எனக்கு உண்டாக்கிய இந்தக் காமமான தீ தனக்குப் பகையான நீருள் புகுந்தாலும் வேகும்படி சுடும்

தன் மனத்தில் ஒரு துணிவு இல்லாதவள் என்ன பித்து ஏறினாள் எனச் சொல்லி இக் காமநோய் அறியாதவர் என்னை இகழ்ந்து சிரிக்க, இந் நோய்க்குத் துணையான ஒர் ஆளறுதி யிலே என்னை இட்டுவைத்து என் வன்மையை அறுத்தவன் நான் விரும்பிய அக் காலத்தில் பின்னால் இப்படி வருத்தும் என்று அறியின் முயங்கேன் அக் காலத்தில் இதை அறியேன் நான்! என்று இயம்பினாள்

காதலி அப்படிக் கடலுடன் வருந்திக் கூறினாள் அத் தகையவளது மனம் கலங்கும் வருத்தம் காட்டித் தீரும்படி அவர் காதலர் விரைந்து வரக் கெட்ட காமநோய் நீங்கியது இவளது நெற்றிப் பசலை, அறநெறி அறிந்து கண்ணோட்டம் உடையவனை அத் திறமில்லாதோர் உண்டாக்கிச் சொன்ன தீய மொழிகள் எல்லாம் என் மக்கள் இருக்கின்ற அவைக் குள்ளே ஆராய அவை கெட்டாற் போல் இல்லையாயிற்று! என்ன வியப்போ! என்று கண்டோர் கூறினர்