பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

283


336. செங்கதிர் முன் இருட் துன்பம் 'துணையுநர் விழை தக்க சிறப்புப்போல், கண்டார்க்கு நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும் கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி உயிர்க்கும், உசாஅம்; உலம்வரும் ஒவாள், கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார, பெயல் சேர் மதி போல, வான் முகம் தோன்ற, பல ஒலி கூந்தலாள், பண்பு எல்லாம் துய்த்துத் துறந்தான்ை உள்ளி, அழுஉம், அவனை மறந்தாள்போல் ஆலி நகூஉம், மருளும், சிறந்த தன் நானும் நலனும் நினையாது, காமம் முனை.இயாள், அலந்தாள் என்று, எனைக் காண, நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது, மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும், நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும், ஊழ் செய்து, இரவும் பகலும் போல் வேறாகி, வீழ்வார்கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்கட்கு எல்லாம் வரும்.

தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான்் போகிய கானம் இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கிவறந்து என்னை செய்தியோ, வானம்? சிறந்த என் கண்ணிர்க் கடலால், கனை துளி வீசாயோ, கொண்மூக் குழிஇ முகந்து?

நுமக்கு எவன் போலுமோ? ஊரீர் எமக்கும் எம் கண்பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே! எல்லாக் கதிரும் பரப்பி, பகலொடு செல்லாது நின்றியல் வேண்டுவல்; நீ செல்லின், புல்லென் மருள்மாலைப் போழ்து இன்று வந்தது என்னைக் கொல்லாது போதல் அரிதால், அதனொடு யான் செல்லாது நிற்றல் இலேன்