பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

285


பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர, ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என் ஆயிழை உற்ற துயர். - கவி 145 மக்கள் விரைந்து விரும்பும் தலைமை போல் இருக்கும் காமமானது நள்ளிருளில் கண்டவர்க்கு நனவில் உதவாமல் வேறுபட்டுப் போகும் கனவிலும் நிலைபெறாததாக உள்ளது எப்படி என்றால் பலவாய்த் தழைத்த கூந்தலை உடைய ஒருத்தி அவள். தன் குணங்களை யெல்லாம் நுகர்ந்து தன்னைக் கைவிட்டவனை நினைத்துப் பெருமூச்சு விடுவாள் அவனுடன் கூடும் விதத்தைப் பற்றிச் சிலரை வினவுவாள்; நெஞ்சு கலங்கு வாள்; பெய்யும் மழையைச் சேர்ந்த திங்கள் போல் தன் முகம் தோன்றும்படி கயலைப் போல் விளங்கும் தன் விழி களினின்று விழும் நீர் முகத்தில் வடியுமாறு ஒழியாமல் அழுவாள்; அவனை மறந்தவளைப் போல் ஆரவாரித்து இடையே சிரிக்கவும் செய்வாள்; ஆதலால் தனக்குச் சிறந்த தன் நாணத்தையும் மற்ற நற்குணங்களையும் நிலைபெற நினையாது காமம் ஒன்றை மட்டுமே எண்ணி வருந்துவாள் என்று இங்ங்னம் இகழ்ந்து கூறி எல்லாரும் காண என்னைச் சிரிக்காதீர், ஐந்து அறிவினை உடையவர்களே, நான் சுருக்க மாய்க் கூறுவேன் அதன் தன்மையாக் கேளுங்கள்" என்று சொன்னாள் அங்ங்னம் கூறுபவள் மங்கையர் தோளைச் சேர்ந்த ஆடவர் அவர்கள் வருத்தம் அடையும்படி பிரிதலும், பின்பு நீண்ட சுரத்தில் சென்றவர்கள் விரைவாய் வந்து அருள் செய்தலுமான இரண்டும் இரவும் பகலும் போல ஒருவரை ஒருவர் விரும்புபவரிடம் தோன்றும் இன்பம் நிலையில்லாமையான தடு மாற்றமாய் இருக்கும் அது தனக்கே அன்றி உலகத்தில் கூடியிருந்து வாழ்பவர்க்கெல்லாம் வரவும் செய்யும் என்று அவள் அதன் தன்மையைச் சொன்னாள்

அவ்வாறு கூறி, நாம் இங்ங்னம் ஆனோம் என்று எண்ணி அழுபவள், அங்கு எழுந்த வெண்மையான முகி லினைப் பார்த்து, "முகிலே, நீ பெய்யாமல் வறண்டு என்னை என்ன காரியம் செய்கின்றாய்? உன் இனத்துடன் கூடி என்