பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

27


பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய ஒதமொடு பெயருந்துறைவ்ற்குப் பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே! - ஐங் 155 தலைவி, “வெள்ளாங்குருகின் குஞ்சினைத் தனதாக எண்ணிக் காண்பதற்குச் சென்ற நாரை இறகு அடித்து அசைகின்றது. ஆதலால் நெருங்கிய நெய்தல்கள் நீர்பரப்பில் பெருகி வரும் அலைகளுடன் நீங்கும் துறைவனுக்குக் களவில் யான் பஞ்சாய்ப் பாவையைப் பெற்றேன். ஆதலால் இது போதுமானது” என்று வாயில் வேண்டிய தோழிக்குக் கூறினாள்.

54. காதலன் எனக்கோ அன்னைக்கோ வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக், கானிய சென்ற மட நடை நாரை பதைப்ப, ஒழிந்த செம் மறுத் தூவி தெண் கழிப் பரக்குந் துறைவன் எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே! - ஐங் 156 தோழி, “வெள்ளாங்குருகின் குஞ்சைத் தன் பார்ப்பு என்று எண்ணி அதைக் காண்பதற்குச் சென்ற மடப்பம் உடைய நாரை தன் இறகுகளைக் கோதியதால் உதிர்ந்த, செவ்விய வரிகளை யுடைய இறகு தெளிவான நீர்பரப்பில் போய்ப்பரவும் துறைவன், தலைவியிடம் மிக்க அன்புடையவன் என்பது எனக்கு உண்மை என்றே தோன்றுகிறது எனினும், என் தாய்க்கு வேறாய் விளங்குகின்றது. நான் என்ன செய் வேன்? என்று வாயிலாக வந்தவர்க்கு மறுத்து உரைத்தாள்

55. தனித்து வந்தான்் மைந்தன் வெள்ளங்குருகின் பிள்ளை செத்தெனக், கானிய சென்ற மட நடை நாரை காலை இருந்து மாலைக் சேக்கும் தெண் கடல் சேர்ப்பனொடு வாரான், தான்் வந்தனன், எம் காதலோனே! - ஐங் 157 “வெள்ளாங்குருகின் குஞ்சைத் தன் குஞ்சு என்று எண்ணி அதனைக் காண்பதற்குச் சென்ற மடநடிை நாரை, காலை