பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

289


செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான் நக்கது, பல் மாண் நினைந்து. :

கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்! வரைபவன் என்னின் அகலான் - அவனை, திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம், நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன்; யானும் உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான்் யாண்டு ஒளிப்பான்கொல்லோ மற்று? மருள் கூர் பினை போல் மயங்க, வெந்நோய் செய்யும் மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி யாமம் தலை வந்தன்றுஆயின், அதற்கு என் நோய் பாடுவேன், பல்லாருள் சென்று. யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும் யாமம்! நீ துஞ்சலைமன். எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண் முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின், கதிர்கள் மழுங்கி, மதியும், அதிர்வது போல் ஒடிச் சுழல்வதுமன். பேர்ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே! நீரைச் செறுத்து, நிறைவுற ஒம்புமின் - கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது போலாது, என் மெய்க் கனலும் நோய். இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே, வருத்துறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்; அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி, பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச் செல்வேன், விழுமம் உழந்து. என ஆங்குப் பாட, அருள் உற்று, வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன்