பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

291


தன்மை யுடையவள் போல் இருந்தீச் அவன் அன்பற்றவன் அஃது என்னவென்றால் அவன் இந்த உடலினின்று போகும் உயிர்க்கு உறுதியாகுமாறு, சிவந்த நிறத்தையும் புள்ளிகளை யும் உடைய தேர்ச் சகடம் போன்ற ஆண் நண்டு பெண் நண்டோடு நிகழ்த்தும் பல சிறப்புகளையும் நான் உன்னிடத்தே நிகழ்த்து மாறு உன் நெஞ்சால் எண்ணி, அவை செய்வன வற்றையும் அங்குப் பாராய் என்றான் அதனால் அவனது . அன்புடைமையை அறிந்தே நான் அவனொடு புணர்ந்தது. அக் காலத்தில் என் நாணமும் என் நலமும் என் உள்ளமும் புணர்ச்சியால் மிக்கன. அவை அவன் நீங்கிய போதே அவனிடம் நின்றுவிட்டன. ஆதலால்தான்் நோய் மிகும் அவற்றைக் கடந்த தன்மை உடையேன் அல்லேன்" என்று சொன்னாள்.

அவ்வாறு அவள் சொன்னவள். பின் "என்னைப்போல ஒர் எல்லை அறிய முடியாத காம நோயில் மூழ்காதவனை உயர்வு கெடுமாறு அவன் பிரிந்து நாணம் முதலியவற்றைத் தாராத கொடுமையை நாடி அவள் வந்த காலத்தன்றே நீ அவற்றைப் பெறுவது உறுதி என மொழிபவர்களே, கதிர் களை உடைய ஞாயிற்றை நான் நோக்கி அலையைத் தரும் கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் தேடிக் கொண்டுவா எனக் கூறிவிட்டேன். அதுவே அன்றி அவன் இவ்விடத்தான்் என்றி சொல் கேட்கும் இடம் எல்லாம் போய்த் தேடுவேன் இவ்வாறு தேடும் அளவில் உயர்வு நீங்கிய அவன் எங்கு ஒளிந்திருப்பான்? அவனைக் கைப்பற்றிக் கொண்டு நாண் முதலியவற்றைத் திரும்பப் பெற்றே தீர்வேன் என்னை நெஞ்சால் வரைந்துள்ளவன் என்னிடமிருந்து நீங்கான்!” என்றும் அவள் மொழிந்தாள்.

அவ்வாறு அவள் கூறிய அளவில், மாலையும் இரவும் வந்தன. அவை வருவதை உணர்ந்தாள் "மயக்கம் மிக்க பெண்மான் போல் நான் மயங்கும்படி கொடிய காம நோயை உண்டாக்கும் மாலைக் காலமும் வந்து, அதனுடன் மயங்கி, தீக்கொழுந்துபோல் கொடிய இராக் காலமும் அங்கு வந்ததாயின், அதில் நான் பட்ட வருத்தத்தை என்போல் வருந்தும் பல மகளிருக்குள்ளே போய்ச் சொல்வேன் பலரை