பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

293


முயங்குகையால், அம் மங்கையின் துன்பம் போயிற்று” இவ்வாறு கண்டோர் வியந்து தங்களுக்குள் கூறினார்கள்

338. காதலன் மார்பில் காதலி சேர்ந்தாள்

ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய, தேறுகள் நறவு உண்டார் மயக்கம்போல், காமம் வேறு ஒரு பாற்று ஆனதுகொல்லோ? சீறடிச் சிலம்புஆர்ப்ப, இயலியாள் இவள்மன்னோ, இனி மன்னும் புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் - விலங்கு ஆக வேல் துதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன் தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு ஊண் யாதும் இலன் ஆகி, உயிரினும் சிறந்த தன் நாண் யாதும்இலள் ஆகி, நகுதலும் நகூஉம் ஆங்கே பெண்மையும் இலள் ஆகி ஆதலும் அழுஉம், தோழி ஓர் ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ? இவர் யாவர் ஏமுற்றார் கண்டிரே? ஒஒl அமையும் தவறிலீர் மற்கொலோ? நகையின் மிக்கதன் காமமும் ஒன்று என்ப; அம்மா புது நலம் பூ வாடியற்று, தாம் வீழ்வார் மதி மருள நீத்தக்கடை என்னையே மூசி, கதுமென நோக்கன்மின் வந்து. கலைஇய கண், புருவம், தோள், நுகப்பு, ஏனர் சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை விலை வளம் மாற அறியாது, ஒருவன் வலை அகப்பட்டது என் நெஞ்சுவாழிய, கேளிர்! பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை முலையிடை வாங்கி முயங்கினன், நீத்த கொலைவனைக் காணேன்கொல், யான்?

காணினும், என்னை அறிதிர் கதிர் பற்றி ஆங்கு எதிர் நோக்குவன் - ஞாயிறே - எம் கேள்வன்