பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


யாங்கு உளன் ஆயினும் காட்டிமோ? காட்டாயேல் வானத்து எவன் செய்தி, நீ? - ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல, நீருள்ளும் தோன்றுதி, ஞாயிறே அவ் வழித் தேரை தினப்படல் ஒம்பு. நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை, பல் கதிர் சாம்பிப் பகல் ஒழிய, பட்டிமோசெல் கதிர் ஞாயிறே. நீ. அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான்் கறாஅ எருமைய காடு இறந்தான்்கொல்லோ? உறாஅத் தகை செய்து இவ் ஊர் உள்ளான்கொல்லோ? செறாஅது உளனாயின், கொள்வேன்; அவனைப் பெறாஅது யான் நோவேன், அவனை எற் காட்டிச் சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும், உறாஅ அரைச நின் ஒலைக்கண் கொண்டி, மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று, அறாஅ தணிக, இந் நோய். தன் நெஞ்சு ஒருவற்கு இணைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம! நின் அம்பு? கையாறு செய்தான்ைக் காணின், கலுழ் கண்ணால் பையென நோக்குவேன்; தாழ் தான்ை பற்றுவேன்; ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல் ஒய்யெனப் பூசல் இடுவேன்மன், யான் - அவனை மெய்யாகக் கள்வனோ என்று. வினவன்மின் ஊரவிர்! என்னை எஞ்ஞான்றும் மடாஅ நறவு உண்டார் போல, மருள விடாஅது உயிரொடு கூடிற்று - என் உண்கண் படா.அமை செய்தான்் தொடர்பு. கனவினான் காணிய, கண் படாஆயின், நனவினான், ஞாயிறே காட்டாய் நீஆயின்