பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

295


பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன் கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு. என ஆங்கு கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள், தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள், அன்னையோ! எல்லீரும் காண்மின் மடவரல் மெல் நடைப் பேடை துணைதர, தற் சேர்ந்த அன்ன வான் சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல் காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை. நகை ஒழிந்து, நானு மெய் நிற்ப, இறைஞ்சி, தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் ந்கை ஆக், நல் எழில் மார்பனகத்து. * - கவி 17 தோழியே, அறநெறி அல்லாத தீய சொற்கள்ைத் தம் மிடம் தோன்றி, அறமற்ற தொழில்களைத் தம்மிடம் தோன் றாமல் கலக்க வேண்டித் தெளிந்த கள்ளையும் நறவையும் உண்டவரின் உலகியல் கெட்ட மயக்கம் போல் நல்லவர். ஆற்றுகின்ற காமம் உலகியல் தவறி வேறு ஒரு பகுதியாகி விட்டதோ? அதற்குக் காரணம் என்ன என்றால் இப்போது கணவன் இல்லாத தனிமை பரவுகையால் பொலிவற்ற அழகையுடையளான இவள், வேலின் முனை செய்யும் கொடுமையை அடையுமாறு எதிரே நோக்காது விலக்குதல் உண்டாக நோக்குதலால் நெஞ்சம் உருகும் கணவனைப் பிரிந்தவளைப் போல் தெருவில் புறப்பட்டாள் வெளியில் தன் அடியில் சிலம்பு ஒலிக்க எவ் இடத்தும் திரிபவள் ஆனாள் அதுவே அல்லாது உணவு சிறிதும் இல்லாமல் மேனி வாடி உயிரை விடச் சிறந்த நாணமும் சிறிதும் இல்லாத வளாய்ச் சிரிக்கவும் செய்வாள் அப்போதே பெண்மையும் இல்லாதவளாய் அழவும் அழுவாள் இதை மனத்தால் ஆராய்ந்து பார் அங்ங்னம் ஆராய்ந்து இவள் அடைந்த வருத்தத்தை இவளருகில் போய்க் கேளேமோ? கேட்டோம் என்று சொல்லி மொய்த்து விரைவாய் வந்து என்னைப் பாராமல் கொள்ளுங்கள் உமக்கு முன்னம் இவரைச் சூழ்ந்து நின்ற இவரைக் கண்டீரே, ஒஒ இவரே நிற்க அமையும்