பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


நீவிர் இதற்கு முன்பு நான் அடைந்த தவறு இல்லாதவர் போலிருந்து உமக்கும் ஒரு காலத்தே உண்டாகும் இனிமேல் நான் சொல்வதைக் கேட்பீராக தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் ஒரு காமம் என்று நூல்களில் உரைப்பர் ஆதலால் அதனை யுற்று நின்ற என்னை இகழாமல் கொள்ளுங்கள். இங்கு ஏமுற்றார் யார்? யார் ஏமுற்றது என்று தாம் விரும்பிய ஆடவர் தம் அறிவு மயங்கும்படி கைவிட்டபோது அவர் பெற்ற நலம் கெடும் தன்மையானது வண்டு நுகர்ந்து தன் புதிய நலம் கெட்ட பூவின் நிலைமையுடையது காணுங்கள்!” என்றாள்

("இவர் யாவர்? என்றது முதல் தலைவியின் கூற்று தன்னைச் சேர்ந்து வரும் மகளிரை நோக்கி இவர் யார்? என்றாள் என்க. அதன்பின்பு அவள் தன்னை வியப்புடன் பார்க்கும் அப் பெண்டிரை நோக்கி, ‘நீங்கள் எதைக் கண்டு வியக்கின்றீர்? இங்குப் பித்துக் கொண்டவரைக் கண்டீரோ? என்று கடியவள் ‘ஏமுற்றார் கண்டீரோ என்றாள் மேலும் அவர்கள் தன்னை நோக்குதலால் மகளிர்க்கெல்லாம் இது பொருந்தும் என்பதால் 'ஓ, அமையும் என்றாள்)

அவ்வாறு சொல்லி, “அவனுடன் கலந்த கண், புருவம், தோள், இடை, நீண்ட இருண்ட கூந்தல் என்பனவற்றின் அழகைப் பெறும் விலையின் வளப்பத்தை அறிந்து கொடுத்த வனிடத்து உள்ளவற்றைக் கொள்ளுதல் அறியாமல் ஒருவன் கூறிய பொய்யான வலையிலே என் நெஞ்சு அகப்பட்டு விட்டது” எனச் சொன்னாள் சொல்லி, மேலும், “கேளிர், வாழ்க!” என்று அவர்க்கு முகமன் கூறி, "அவன் இயற்கைப் புணர்ச்சியிலும் பல சூள் சொல்வதாலும் எனது மனத்தைத் தேற்றித் தெளியச் செய்தவன் என்னை அணைத்து முலையில் முயங்கினான் பின்பு தெளிவு பொய்யாகுமாறு கைவிட்ட கொலைத் தொழில் வல்லவன் அத்தகையவனைத் தேடிக் காண்பேனோ?

அவன் என்னைக் கண்டாலும் அவனால் நான் அடையும் பொலிவை அறியமாட்டீர்” என அவரைப் பார்த்துச் சொன்னாள்

அவர்கள் விடை சொல்லவில்லை