பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வணங்கும் தெய்வமாதலால் அவனைத் தண்டியாமல் தணி வாயாக’ எனச் சொன்னாள்

அவ்வாறு சொல்லிக் காமனை நோக்கி, “காமனே! உன் அம்புள் தனக்கு உரிய நெஞ்சைத் தன்மேல் அன்பில்லாதவன் ஒருவன் பொருட்டு வருந்ததும்படி செய்தல் சிலர்க்கே அல்லாது எல்லார்க்கும் பொருந்தும் தன்மையை உடைய வையோ, அல்லவோ?’ என்றும் இயம்பினாள்.

அவ்வாறு இயம்பி, இனிவரும் இரவில் உன் அம்புகளால் நான் இறந்துபடுமாறு செய்யாது, நான் உயிர் கொண்டு இருக்குமாறு அருள் செய்தால், அவசத்தால் சிறிது துயின்று கலங்கிய கண்ணால் எனக்குத் துன்பம் செய்தவனைக் கனவில் கண்டேனாயின், அப்போது என் கண்ணைக் கடுக விழித்துப் பாராமல் மெத்தெனப் பார்ப்பேன். பார்த்த பின்பு அவன் தப்பிப் போகாதபடி அவனது துகிலைப் பிடித்துக் கொள் வேன். எனது மேனி வேறுபாட்டைக் கண்டு, 'இவள் நம் தலைவியோ!' என்ற ஐயத்தை மனத்தில் அவன் கொள்வான். கொண்டு என்னைக் கைவிடுவான். கைவிடின், என் நாணம் முதலிய குணங்களையும் மேனி நலத்தையும் மெய்யாய்க் கொண்டு போன கள்வன் என்று எல்லாரும் கேட்குமாறு விரைந்து கூப்பிடுவேன்.” என்ற அவள் காமனை நோக்கிச் சொன்னாள் -

பின் அவள் ஊரவரைப் பார்த்து, “ஊரிலுள்ளவர்களே! எங்களை நோக்கிக் கூறும் நீவிர் ஞாயிற்றையும் காமனையும் பார்த்துக் கூறியதற்கு அவை என்ன செய்யும் என்று என்னைக் கேட்காதீர் எந் நாளும் என் கண் உறங்காமையைச் செய்தவன் தந்த நட்பால் உண்டான நோய் சமைக்காத கள்ளை உண்டவரைப் போல் மயங்கும்படி விடாது உயிரைப் பொருந்தும் தன்மையுடன் கூடிவிட்டது இனி இந்த உயிரைக் காக்கும் வழி உண்டாயின் காப்பீர் என்றும் மொழிந்தாள் அவள்

அதற்கு அவர்கள் மறுமொழி சொல்லவில்லை அதனால் முன் சொன்ன ஞாயிற்றையும் காமனையுமே திரும்பவும் நினைத்தாள் "வருகின்ற இரவில் கனவில் அவனைப் பார்த்து ஆற்றுவதற்குக் காமன் அம்பு செய்கின்ற கொடுமையால்